பாடையில் படுப்பதுபோல் நடித்ததால் பரிகாரம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சுவாரசிய சம்பவம்!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாடையில் படுத்து நடித்த நடிகைக்கு திருஷ்டி கழித்து பரிகாரம் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் உள்ளது. யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவுமம் வரவேற்பும் உள்ளது.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை
குடும்ப சித்திரமாக இந்த சீரியல் உள்ளதால் பல குடும்பங்கள் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர். அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

டி.ஆர்.பி-யை குறி வைத்து
சமீபத்தில் இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா இறந்ததாகக் காட்டப்பட்டது. டி.ஆர்.பி-யை குறி வைத்து சுவாரஸ்யத்தை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சீரியலை விட்டு தூக்கப்பட்டார்
மேலும் நடிகை ஷீலாவின் மகன் விக்ராந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாமல், ஜீ தமிழின் 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதால், அதிருப்தியடைந்த விஜய் டிவி நிர்வாகம் ஷீலாவை சீரியலை விட்டு தூக்கியதாகவும் தகவல் வெளியானது.

மீண்டும் லட்சுமி அம்மா
ஆனால் இந்தத் தகவலை மறுத்த ஷீலா, விரைவில் ஒளிபரப்பாகவுள்ள விஜய் டிவி-யின் புதிய சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக தான் நடிக்கவிருப்பதாகக் கூறினார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மீண்டும் லட்சுமி அம்மா வந்திருப்பதாக ப்ரோமோ வெளியானது.

செட்டில் நடந்த சுவாரசிய சம்பவம்
இந்நிலையில் நடிகை ஷீலா இறந்ததாக நடித்த காட்சிக்கு பிறகு செட்டில் நடந்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலா பாடையில் படுப்பது போல் நடித்துள்ளார். அதாவது இறந்து போனது போல் நடித்துள்ளார்.

திருஷ்டி கழிக்கும் சம்பிரதாயங்கள்
இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்தவுடன் நடித்தவருக்கு பூசணிக்காயாலும் எலுமிச்சை பழத்தினாலும் மற்றும் தேங்காயாலும் கற்பூரம் கொளுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகுதான் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்களாம். இந்நிலையில் ஷீலா அப்படி நடித்ததால் இந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் நடிகை ஷீலா அம்மாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.

பாடைக் காட்சிக்கு பிறகு பரிகாரம்
அதோடு மட்டுமின்றி நீண்ட தூரத்திற்கு நடிகை ஷீலாவை பாடையில் வைத்து தூக்கிச் செல்வது கடினமான காரியம் என்பதால், அவருக்கு பதிலாக டூப் ஆக ஒரு பொம்மையை தயார் செய்துள்ளனர். இவ்வாறு பாசத்தோடு நடந்து கொண்டுள்ளனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாடைக் காட்சிக்கு பிறகு ஷீலா அம்மாவுக்கு பரிகாரம் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











