2 ரூபாய் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட சிவாங்கி.. வாங்கிக் கொடுத்த அந்த பிரபலம் யாருன்னு பாருங்க!
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக இர்ஃபான் பங்கேற்றுள்ளார். பிரபல யூடியூபரான இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் வொர்த்தா சீரிஸ் என பிரபலங்களை வைத்து குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை இருக்கும் உணவுகளை பிரபலங்களுடன் சென்று சாப்பிட்டு எது வொர்த் என சொல்லும் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சிக்கன் 65 கடைகளுக்கு சென்று சிக்கன் 65 டேஸ்ட் பண்ண யூடியூபர் இர்ஃபான் அடுத்து பிக் பாஸ் மாயாவுடன் 300 ரூபாய்க்கு விற்கும் பானிப்பூரி வரை சாப்பிட்ட வீடியோக்கள் வெளியாகின.

சிவாங்கியுடன் 2 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை சென்னையில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களை வாங்கிக் கொடுத்து போட்டுள்ள வீடியோவுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
கமல் முதல் விஜய் வரை: விருது விழா நிகழ்ச்சியில் யூடியூபர் இர்ஃபானை கமல்ஹாசன் பாராட்டி பேசியிருந்தார். இர்பான் வீடியோக்களை தானும் பார்ப்பதாக கூறினார். தளபதி விஜய்யின் லியோ படம் காஷ்மீரில் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது நேரடியாக அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று வீடியோ ஒன்றை போட்டிருந்தார் இர்ஃபான். பிரியா ஆனந்த் உடன் எல்லாம் அவர் விளையாடிய காட்சிகள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.
குக் வித் கோமாளி சீசன் 5: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக களமிறங்கி வித விதமான உணவுகளை சமைக்க ஆரம்பித்துள்ளார் இர்ஃபான். இதுவரை பல ஹோட்டல்களுக்கு சென்று உணவை உண்டு ரசித்து ருசித்து நல்லா இருக்கு இல்லைன்னு கமெண்ட் செய்து வந்த இர்ஃபான் இந்த சீசனில் குக்காக மாறியிருப்பதே ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.
2 ரூபாய் ஐஸ்க்ரீம்: வினுஷ் இக்லூ எனும் கடையில் 2 ரூபாய்க்கு கோன் ஐஸ் விற்பனை இன்னமும் செய்து வருகின்றனர். அந்த ஐஸ்க்ரீம் கடைக்கு சிவாங்கியுடன் இர்ஃபான் சென்று ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட அந்த ஐஸ்க்ரீமுக்கு 5 ஸ்டார் கொடுக்கலாம் என சிவாங்கி ரேட்டிங் கொடுத்துள்ளார். ஹாகன் டாஸ் எனும் கடையில் 2000 ரூபாய்க்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்தளவுக்கு வொர்த்தாக இல்லை என இர்ஃபான் மற்றும் சிவாங்கி சொல்லும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











