எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து விலகினாரா கனிகா.. நடந்தது என்ன?
சென்னை: சன் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இல்லத்தரசிகள் அனைவருக்கும் பிடித்தமான தொடராக இருக்கும் இந்த சீரியல் தற்போது 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஆரம்பத்தில் டல்லாக சென்று கொண்டிருந்தது. இந்த சீரியல் தர்ஷன் திருமண விவகாரத்தால் சூடு பிடித்தது. தர்ஷன் வீட்டை விட்டு ஓடியது, அதன்பிறகு பார்கவியின் அப்பாவிற்கு நடந்த துயரமான சம்பவம் என இருநூறாவது எபிசோடில், சீரியல் நன்றாக பிக்கப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஈஸ்வரி, தர்ஷனுக்கு பார்கவிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடிவிட்டதால், பார்கவி இனி இந்த குடும்பத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கனடாவுக்கு சென்று விட்டார். தர்ஷனுக்கும் அறிவுக்கரசியின் தங்கைக்கும் நடக்க இருக்கும் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைத்த ஈஸ்வரி, குணசேகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்று அதில் ஏற்பட்டால் சண்டையில், தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்து தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்.
காரணம் யார்?: ஈஸ்வரியை இந்த நிலைமைக்கு காரணம் யார்? யார் இந்த கொடூரமான செயலை செய்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக மூன்று மருமகளும், குணசேகரன் வீட்டை அலசி ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்க இந்த சீரியலில் இருந்து ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த கனிகா விலகி விட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் ஈஸ்வரி சுயநினைவு இழந்து கோமா நிலையில் இருப்பதால் அவருடைய கதாபாத்திரத்தை முடித்து விட இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விலகுகிறாரா: இதனால் ஈஸ்வரியின் கதாபாத்திரம் முடிக்கப்படுகிறதா.. இல்லை, தனிப்பட்ட சில காரணங்களுக்காக கனிகா சீரியலில் இருந்து விலகுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், பல ஊடகங்களில் கனிகா இந்த சீரியலில் இருந்து விலகப்போகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கனிகா இது குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. கனிகா சீரியலில் இருந்து விலகுவது வதந்தியா, உண்மையா என்பது தெரியவில்லை என்றாலும், அவரின் ரசிகர்கள் இந்த செய்தியால் சோகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











