Azhagu serial: நிலாச் சோறுக்கு அழகம்மை சொன்ன கதை உண்மையா?

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் இரவு சாப்பிடற நேரத்தில் கரண்ட் கட்டாகிப் போகுது. இதனால், மாடியில் போயி நிலாச் சோறு சாப்பிடலாம் என்று முடிவு செய்து, மாடிக்கு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போறாங்க.

ஒரு பெரிய கிண்ணத்தில் சாதம் போட்டு, சாம்பார் ஊற்றி கலந்து பிசைந்து, பெரிய பெரிய உருண்டையாக கையில் பிடித்து கொடுக்க சாப்பிடுவதுதான் நிலாச்சோறுன்னு சொல்லுவாங்க.

இந்த நிலாச்சோறு சாப்பிடத்தான் அழகு சீரியலின் அழகம்மை குடும்பம் இப்போது மாடியில் முகாமிட்டு இருக்காங்க. கிண்ணத்தில் அழகு சாதத்தை பிசைந்து கொண்டு இருக்க, புருஷன் வீட்டுக்கு போயிட்ட மகள் காவ்யாவின் நினைவு வந்துருது.

நிலா சோறு

நிலா சோறு

அழகம்மையின் கடைசி பையன் அதென்னம்மா நிலாச்சோறு... சூரியனை தினம் பார்க்கறோம்.ஏன் சூரியன் சோறு சாப்பிடுவது இல்லைன்னு கேட்கறான். அதுக்கு அப்பா பழனிச்சாமி அழகம்மையைப் பார்த்து சிரிக்கறார். என்னை பார்த்து ஏன் ரவிப்பா சிரிக்கறீங்க. திருநா கேட்கறானில்ல பதில் சொல்லுங்கன்னு சொல்றாங்க. இதே கேள்வியை ஒரு நாள் என்கிட்டே படிச்ச மாணவன் கேட்டான் அதை நினைச்சுகிட்டேன்னு சொல்றார்.

அழகுதான் பதில்

அழகுதான் பதில்

எனக்கும் தெரியலை...என்னடா ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு நம்மால பதில் சொல்ல முடியாமப் போயிருச்சேன்னு ஒரே கவலை. என் முகத்தை பார்த்துட்டு, அழகுதான் என்ன பிரச்சனைன்னு கேட்டா. அதுக்கு பள்ளியில் நடந்ததை பத்தி சொன்னேன்.அப்போதுதான் அழகு சரியான பதில் சொன்னா. அதை நான் மறுநாள் அந்த பையன்கிட்ட சொன்னேன்னு சொல்றார்.

நிலாவை காட்டி

நிலாவை காட்டி

நமக்கு முதன் முதலில் நிலாவை காட்டித்தான் அம்மா சோறு ஊட்டுவாங்க. நமக்கு முதலில் நிலாவை காமிச்சது அம்மாதான்.ஆனாலும் இப்போதும் நிலாவைப் பார்த்தால் நமக்கு அம்மாதான் முதலில் நினைவுக்கு வருவாங்க. நாம் நிலாச் சோறு சாப்பிடறது அம்மாவுக்கு சொல்ற நண்றி கடன் மாதிரி.அதுவும் இல்லாமல் அம்மாவுக்கு நாமும் ஒரு வாய் சோறு ஊட்டின நிம்மதி கிடைக்கும் .அதுக்குத்தான் நிலா சோறு சாப்பிடறது வழக்கத்தில் வந்துச்சுன்னு சொல்றாங்க.

நிலாச்சோறு அம்மாதான்

நிலாச்சோறு அம்மாதான்

கதை உண்மையோ பொய்யோ, குழந்தைக்கு முதலில் அப்பாவை காட்டுவதும் அம்மாதான். நிலாவைக் காட்டுவதும் அம்மாதான். ஜாதகத்தின் படியும் நிலா கிரகம் அம்மாவைத்தான் சுட்டிக் காட்டுது. சூரியன் கிரகம் அப்பாவைத்தான் சுட்டிக் காட்டுது. கதை நல்லாத்தான் இருக்கு.இனி நிலாச் சோறு சாப்பிடும்போது எல்லாருக்கும் அம்மா பக்கத்தில் இருந்தாலும் அம்மா நினைவு வரத்தான் செய்யும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X