பிக்பாஸ் டாஸ்க்கில் ஏமாற்றினாரா சேரன்? நடந்தது என்ன?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் டாஸ்க்கில் சேரன் ஏமாற்றினார் என்று தகவல் பரவி வரும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் அனைத்து டாஸ்க்குகளையும் 100 சதவீத ஆர்வத்தோடு செய்பவர் சேரன். அதற்கான அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பொம்மலாட்டம் தெருக்கூத்து போன்றவை கற்றுத்தரப்பட்டு அதுதொடர்பான டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டன.

கையால் தொட்ட சேரன்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஃபுரூட்டி ஜூஸ் குடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது கையால் தொடாமல் ஃபுரூட்டி பாட்டில் தொங்கும் ஸ்டாண்ட்டை தங்களின் முதுகில் மாட்டியப்படி போட்டியாளர்கள் பாட்டிலில் உள்ள ஜூஸை குடிக்க வேண்டும்.
இதில் நான்கு பேராக இரண்டு குழுக்களாக மாறி ஹவுஸ்மேட்ஸ்கள் கலந்துகொண்டனர். அப்போது சேரன் கையால் பாட்டிலை தாங்கியபடி ஜூஸை குடித்தார். இது நன்றாகவே தெரிந்தது.
இதில் நான்கு பேராக இரண்டு குழுக்களாக மாறி ஹவுஸ்மேட்ஸ்கள் கலந்துகொண்டனர். அப்போது சேரன் கையால் பாட்டீலை தாங்கியபடி ஜூஸை குடித்தார். இது நன்றாகவே தெரிந்தது.
சேரன் ஏமாற்றினாரா?
ஆனால் சிலர், சேரன் போட்டியில் ஏமாற்றிவிட்டதாக கூறி சமுக வலைதளங்களில் சில காட்சிகளை வைரலாக்கினர். மேலும் சேரன் மற்றவர்களை கையை பயன்படுத்தக்கூடாது என்று கூறியதை டிவிட்டி கிண்டல் செய்தனர்.

வேற ஆப்ஷன் இல்லை
இந்நிலையில் டாஸ்க்கில் சேரனுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டாண்டில் பாட்டிலில் கட்டப்பட்டிருந்த நூல் அறுந்துபோயிருந்தது. இதனால் அவர் இழுத்த இழுப்புக்கு வரவில்லை. இதனால் வேற ஆப்ஷன் இல்லாமல் கையால் தொட வேண்டியதாகிவிட்டது.
புதிய வீடியோ
இந்நிலையில் சேரன் ஆதரவு ரசிகர்கள் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டிருப்பதோடு, நூல் அறுந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பொறாமை
இரண்டுமே வேண்டுமென்றே செய்யாத தற்செயலா செய்த டாஸ்க்தான். ஆனால் சேரனை மட்டுமே குறிவைக்கிறார்கள் ஏன்? பொறாமை! நல்ல மனிதர் சேரன் என்பதால்! என்று கூறுகிறார் இவர்.
என்ன வேணாலும் நடந்திருக்கலாம்
அவரு விளையாடாம இருந்திருக்கலாம். ஹவுஸ்மேட்ஸ் பரவாயில்லை ஃபன் டாஸ்க்குதானே விளையாடுங்க என்று சொல்லியிருக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.. எடிட்டர் நமக்கு காட்டினது இவ்ளோ தான்.. மது விஷயத்த காட்டினா சேரனையும் கஸ்தூரியையும் தவிர மற்ற எல்லோரும் வில்லன் ஆகியிருப்பாங்க என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











