ஒவ்வொரு எபிசோட் கதையையும் ஒவ்வொருத்தர் எழுதுவாங்களோ....?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல ரேட்டிங்கில் வரும். அதை ஏன் செய்யாமல் இருக்காங்க கதைக்குழுன்னு தெரியலை.
கண்ணன் அக்கா பொண்ணு சவுந்தர்யாவுக்கு கரண்ட் ஷாக் அடிச்சு... கோமா நிலையில இருக்கா. எல்லோரும் கலங்கிப் போயி இருக்கும் சமயத்தில்தான் கண்ணன் சவுந்தர்யாவின் நெத்தியில் கொடுத்த முத்தத்தில் சவுந்தர்யாவுக்கு உசிரே வருது.
கண்ணன் கதி கலங்கி அழுவதைப் பார்த்த முத்துச்செல்வி சவுந்தர்யா மேல சின்னவருக்கு இம்புட்டு பிரியமான்னு நினைப்பு வருது.

முத்துச்செல்வி அப்பாவிடம்
முத்துச்செல்வி தன் அப்பாகிட்ட சொல்றா... சின்னவரு என்னைத்தான் காதலிக்கறாருன்னு எனக்குள்ள இருக்கற காதலை அவர் மனசுக்குள்ள நான் திணிச்சேன்.ஆனா,அவர் சின்ன வயசுலேர்ந்து சவுந்தர்யா அம்மாவைத்தான் நினைச்சுட்டு இருந்துருக்கார் போல இருக்குப்பா.

என்னை பிடிக்கலை
அதனாலதான் அவங்க குடும்பத்துக்கு என்னை பிடிக்கலைப்பா... நான் விலகிடறதுதான் நல்லதுன்னு சொல்றா.அப்படி எல்லாம் சொல்லத்தம்மா... உண்டா இல்லையான்னு அந்த ஐயாகிட்ட கேட்டுட்டு வந்துடறேன்னு கிளம்பறார் முத்துசெல்வியின் அப்பா.

இதுதான் மரியாதையா?
இதுதான் தன்னை வாழ வச்ச குடும்பத்துக்கு முத்துசெல்வி அப்பா தரும் மரியாதையா? இவர் நேர போயி அவரை பார்த்து, சின்னவருக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறீங்களான்னு கேட்கற அளவுக்கு ஐயனுக்கு தைரியம் வந்துருமா?
கிளம்பினவரை வேணாம்னு தடுக்கும் முத்து செல்வி தனது அப்பாவிடம் இதை எல்லாம் கேட்டு இருக்க வேணாமா?

அம்மா விஜயலட்சுமி
விஜயலட்சுமி அம்மா சொல்றாங்க...கண்ணன் கொடுத்த முத்தத்துலதான் சவுந்தர்யாவுக்கு உயிர் வந்து இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க. அப்போ கண்ணனுக்கும், சவுந்தர்யாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு நான் நினைச்சதுல என்னங்க தப்பு இருக்குன்னு புருஷன்கிட்ட பேசிகிட்டு இருந்ததை கேட்டுகிட்டு இருந்த முத்து செல்விக்கு இன்னும் ஒரு சந்தேகம் வருது பாருங்க...அதுதான் இன்னும் கேலியா இருக்கு.

சவுந்தர்யா மனசுல
என்னம்மா இப்படி பேசற... சின்னவரு மனசுல சவுந்தர்யா இருக்கற மாதிரி, சவுந்தர்யா மனசுல சின்னவரு மேல ஆசை இருக்குதுன்னு தெரியாம ஒரு முடிவும் எடுக்காதான்னு அப்பா சொல்றார். கண்ணன் அழுததைப் பார்த்தும், அவன் முத்தம் கொடுத்ததைப் பார்த்தும் கூட ஆமாம் அப்பா சவுந்தர்யா அம்மாவுக்கு சின்னவரு மேல ஆசை இருக்குமோ இல்லையோன்னு ஒத்துக்கறா.

சவுந்தர்யா முத்து
ஒரு நாள் முத்துசெல்வியை நேரில் பார்த்து எனக்கும் மாமாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது நீதான் எல்லா வேலையும் செய்யணும்னு சொன்னப்போ முத்து செல்விக்கு தெரியாதா? புரியாதா?
இல்லை பார்க்கறவங்க பழசை மறந்துருவாங்கன்னு நினைப்பீங்களோ....?


Click it and Unblock the Notifications











