Roja serial: அடிச்சு சொல்லு அர்ஜுன்... தாத்தா சொத்து பேரனுக்குத்தான்!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல், ரோஜா, அர்ஜுனின் பொய்யான ரொமான்ஸ் நடிப்புகள் முடிந்து, இப்போது கதை ரொம்ப சீரியஸாவே ஒளிபரப்பாகிட்டு இருக்கு.

கூட்டு குடும்பம், வீட்டில் பாட்டி இருந்தால் அவங்களை எப்படி மதிக்கறது, மாமனார், மாமியார் இவர்களை வழி வழியா எப்படி மதிக்கத்தக்க அளவு நடத்தப்பட்ட வேண்டும் என்பதை எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது.

இரண்டு தலைமுறை வாழும் ஒரு குடும்பமாக சன் டிவியின் ரோஜா சீரியல் இருக்கிறது. இந்த குடும்பத்திலும் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய அம்சங்கள் இருக்கின்றன.

அணு அஸ்வின்

அணு அஸ்வின்

பையா கணேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அணு, சாக்க்ஷியுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் என்று லாயரான அர்ஜுன், அணுவை ஆதாரத்துடன் பிடிக்க கடுமையாகப் போராடிக்கொண்டு இருக்கான் அர்ஜுன். ஆனால் இந்த கொலை கேஸில் இருந்து தப்பிக்க அர்ஜுன் வீட்டுக்கே அவனின் தம்பி அஸ்வின் மாமாவை கல்யாணம் செய்துகொண்டு, மருமகளாகி விட்டால், தனது மேல் கொலை கேஸ் தொடர வாய்ப்பில்லை என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறாள் அணு.

அணு ஜோதிடர்

அணு ஜோதிடர்

அஸ்வின் ஜாதகத்தின் படி, அவன் ஆயுட் காலம் கம்மி என்றும், அணுவை கல்யாணம் செய்தால் மட்டுமே, அஸ்வின் உயிர் பிழைக்க முடியும் என்றும் அஸ்வின் பெற்றோரிடம் சொல்ல சொல்லி, ஜோதிடரையும் விலை பேசி,கல்யாண ஏற்பாடுகள் நடக்க வைத்துவிடுகிறாள் அணு. தம்பி அஸ்வின் பூஜாவை காதலிக்க, குற்றவாளி அணுவை தம்பிக்கு கல்யாணம் செய்துவைக்க அண்ணண் அர்ஜுன் அனுமதிப்பானா என்ன? இதற்காக தான் மிகவும் மதிப்பு வைத்து இருக்கும் பாட்டி அன்ன பூரணி அம்மாவையே எதிர்த்து பேசுகிறான்.

கல்யாணம் நடக்கும்

கல்யாணம் நடக்கும்

அணு அஸ்வின் கல்யாணம் நிச்சயம் நடக்கும் என்று குடும்பமே ஜோதிடர் சொன்னது உண்மை என்று செயல்படுத்த கிளம்ப, குடும்பத்தினரை தடுத்து நிறுத்துகிறான் அர்ஜுன். பாட்டியையும் எதிர்த்துப் பேச, இந்த கல்யாணம் மட்டும் நடக்கலேன்னா பாட்டி வீட்டை விட்டு வெளியில் போயிடுவேன்னு மிரட்ட, நிச்சயமா கல்யாணம் நடக்காது, இப்பவே வெளியில கிளம்பிப் போயிடுங்க பாட்டின்னு சொல்றான் அர்ஜுன். பாட்டி அழுதுகொண்டே கிளம்பி நிற்க, அர்ஜுனின் அப்பாவுக்கு கோவம் வந்துருது. நீ உன் அப்பா, அம்மா, எங்களை மதிக்கிறியோ இல்லையோ, எனக்கு என் அம்மா தெய்வம். நீ எனக்கு பிள்ளையே இல்லை, அஸ்வின், அணு கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. இந்த வீட்டில் இருக்காதே... உன் பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு வெளியில போன்னு சொல்றார் அப்பா.

அர்ஜுன் சமாளிப்பு

அர்ஜுன் சமாளிப்பு

அர்ஜுன் அப்பாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தாலும், நான் இந்த வீட்டில்தான் இருப்பேன். இது தாத்தா சொத்து, தாத்தா சொத்து பேரனுக்குத்தான் சொந்தம். என்னை வெளியில் போக சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. வீட்டை விட்டு விரட்டிட்டு, கல்யாணத்தை நடத்தலாம்னு கனவு காணாதீங்கன்னு லாயரான அர்ஜுன் பேசுவதும், அப்பா அதிர்ந்து நிற்பதும் பார்க்க நன்றாக இருந்தது. அப்பா பிள்ளைக்கான வாக்கு வாதம் அருமை என்பது பிள்ளையான அர்ஜுனின் நோக்கம் நல்லதுதான் என்பதால் ரசிக்க முடி ந்தது.

ரோஜா அர்ஜுன்

ரோஜா அர்ஜுன்

ரோஜாதான் அர்ஜுன் வீட்டில் அன்ன பூரணி அம்மாவின் பேத்தியாக இருக்க வேண்டியவள். ஆனால், அணு தைரியமா தான்தான் இந்த வீட்டுப் பேத்தி என்று ரோஜாவின் ஆதாரத்தை காண்பித்து, அன்ன பூரணி அம்மா பேத்தியாகவும், கிரேட் லாயர் டைகர் மாணிக்கத்தின் பெண்ணாகவும் நுழைந்து விடுகிறாள். இப்போது ரோஜா அனாதையாகவே அர்ஜுன் மனைவியாக வாழ்கிறாள். ஆனால் ரோஜாவின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடித்த பின்னர்தான் இருவருக்குள்ளும் தாம்பத்யம் என்று இருவரும் முடிவு செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

அர்ஜுன் பாசம்

அர்ஜுன் பாசம்

ரோஜாவுக்கு இந்த உலகத்தில் தன்னை விட்டால் யாரும் இல்லை எனும் ஒரு காரணத்துக்காகவே அர்ஜுன் ரோஜாவை தன் உயிருக்கு உயிராக நேசிப்பதும், அவளை உண்மையில் ரோஜா பூவைப் போல பாதுகாப்பதும், அவளுக்கு தன் குடும்பத்தினரால் வந்தால், அதை அவளை பாதிக்காதவாறு தீர்த்து வைப்பதும் என்று ஒரு கணவன் எப்படி மனைவிக்கு ஆதரவாக இருக்கிறான் என்பதை பார்க்கும் போது, எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு கணவன் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X