மூஞ்சி முழுக்க தாடி.. உள்ளுக்குள் அருந்ததி.. நாடு வெளங்கீரும்!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததி பேய் சண்முகத்தின் உடலில் புகுந்துருது.

பேய்க்கு கோவம் வரும்போது எல்லா உறுமலும் ஆண் குரலில்தான் வருது. ஆனால் ,நடை உடை பாவனையில் பெண் தெரிகிறாள்.

ஏன் இதுவரை அருந்ததி பேய் பெண் குரலில் பேசலைன்னு நம்மில் பலருக்கும் கேள்வி வருது. வீட்டுத் தீய சக்தி யார் உடலிலோ புகுந்துருச்சு... ஆனா, யாருன்னுதான் தெரியலைன்னு நம்பூதிரி அம்மா சொல்றாங்க.

நம்பூதிரி சண்முகம்

நம்பூதிரி சண்முகம்

சண்முகத்துடன் தனியாக பேச வந்திருக்காங்க நம்பூதிரி அம்மா. நீதான் நான் குங்குமம் வைக்கும்போது தள்ளி தள்ளி போனே..உன் உடம்பில்தான் அருந்ததி தீய சக்தி புகுந்து இருக்குன்னு நான் கண்டு பிடிச்சுட்டேன்னு சொல்றாங்க நம்பூதிரி அம்மா.அவங்களையும் தன் தீய சக்தியால் தன் பேச்சை கேட்கற மாதிரி மாத்தி வச்சுக்குது சண்முகத்தினுள் இருக்கும் அருந்ததி பேய்.

தெய்வானை சண்முகம்

தெய்வானை சண்முகம்

கல்யாண சடங்கில் தண்ணிடம் இருக்கும் தீய சக்தியால் தனக்கு நேரும் நிலைமை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதுன்னு நம்பூதிரி அம்மாவின் துணையோடு, எல்லா நல்ல சக்திகளையும் தன் தீய சக்தியால் வென்று தெய்வானை கழுத்தில் தாலியும் கட்டிவிடறான். முதலிரவு அலங்காரத்துடன் அருந்ததி படுக்கை அறையில் நுழையறா.சுற்றும் முற்றும் தேடியும் சண்முகத்தை காணவில்லை. தனது தோளில் யாரோ கை வைக்க தெய்வானை சட்டென்று திரும்பிப் பார்க்கறா...அங்கே சண்முகம்.

நெற்றியில் பெரிய பொட்டு

நெற்றியில் பெரிய பொட்டு

சிவப்பு நிற பட்டு சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூ வச்சுக்கிட்டு, நெத்தியில் பெரிய போட்டு வச்சுக்கிட்டு கண்ணில் மையை அப்பிக்கிட்டு தெய்வானையைப் பார்த்து சிரிக்கறான். சின்னய்யா சின்னய்யா என்று தெய்வானை பயத்தில் நடுங்க அவன் நெருங்கி வந்து சிரிக்கிறான். திடீரென்று அங்குமிங்கும் நின்று தெய்வானை தெய்வானை என்று கூப்பிடறான்.

காணோம் சண்முகத்தை

காணோம் சண்முகத்தை

சண்முகத்தை திடீர்னு காணோம்...அவள் பயத்தில் தேடி வெளியில் வர்றா..எங்கும் காணலை மறுபடியும் உள்ளே போக, அங்கே மிக கொடூரமாக முகத்தை தெய்வானையின் அருகில் காமிக்க, அவ மயங்கி விழுந்துடறா. அவ்ளோதான்..இப்போ வருது பாருங்க சண்முகம் வாயிலிருந்து பெண்ணின் குரலில் வார்த்தைகள்.வெளியில் வருது. தெய்வானை தீய சக்தி யார் உடம்புக்குள்ள இருக்குதுன்னு தேடி அலைஞ்சியே தெய்வானை... என் உடம்புலத்தான்...இனி என் ஆட்டம் பாருன்னு சொல்றான். கீழ வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஒவ்வொருத்தரையா பழி வாங்குவேன்னு சொல்லிட்டு பெண் குரலில் பேய் சிரிப்பு சிரிக்கிறாள் அருந்ததி பேய்.

எல்லாமே கனவா?

எல்லாமே கனவா?

மறுநாள் காலையில் தெய்வானைக்கு சண்முகம் குட்மார்னிங் சொல்ல நேத்து சின்னய்யான்னு தெய்வானை இழுக்கறா.நேத்து என்ன நடந்தது..நீ அசதியில் அப்படியே தூங்கிட்ட. நான்தான் உன்னை பெட்டில் தூக்கி படுக்க வச்சேன்னு சொல்றான்.இல்லை சின்னய்யா நீங்க புடவை கட்டிக்கிட்டுன்னு அவ சொல்ல...கடவுளேநான் புடவை கட்டிக்கிட்டு இருந்தேனா...கனவு கண்டு இருப்பேன்னு சிரிக்கறான்.இவளும்.. ஓ நாம் கண்டது கனவுதானான்னு நினைச்சுக்கறா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X