Malar serial: கல்யாணத்துக்கு முன்னால இதை செய்யலாமா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல், டிவி சீரியல்களிலேயே கொஞ்சம் வித்தியாசா இருக்கு.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அப்பா. இப்போதும் கூட இவர் வீட்டில் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசார்தான். இவரது பிள்ளை கதிரேசன் காவல்துறை உதவி ஆணையர். இந்த கதிருக்கு அத்தை பெண் பூஜா இருந்தாலும், மலரை பெண் பார்க்கிறார்கள்.

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த மலரை கதிருக்கு ரொம்ப பிடித்துப் போகிறது.பிறகென்ன நிச்சயதார்த்தம் முடிந்து, இப்போது கல்யாண தேதியும் நெருங்கி வருது.

மலராமல் இருக்கே

மலராமல் இருக்கே

கதிர் மலர் மேல் கொள்ளைப் பிரியம் வச்சு இருக்கான்.அளவுக்கு அதிகமாக காதலிக்கிறான். மலரும் தன்னை அப்படி காதலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். மலரை கதிர் அடிக்கடி வெளியில் அழைச்சுகிட்டு போறான். கதிருடன் இருக்கும் போது மலர் முகம் எப்போதும் மலராமல் இருக்கிறது. அவன் அவளை அழைச்சுக்கிட்டு, எதாவது கேஸ் என்று இவளையும்கூட அழைத்து சென்றுவிட்டால் போதும்...மலரின் முகம் மொட்டாக கூம்பிவிடும்.

இப்படி இருக்கா

இப்படி இருக்கா

ஏன் மலர் இப்படி இருக்கா...அவளுக்கு கதிரேசனை பிடிக்கலையா இல்லை வேற யாரையாவது காதலிக்கிறாளா என்று பல கேள்விகள் வரும்தான்..
ஆனால், இதில் எதுவும் இல்லை.மலர் தற்காப்புக்காக தான் ஒரு கொலை செய்து விட்டதாக அவ்வப்போது சொல்லிக்கறா.இது தெரிஞ்சது தங்கச்சி சுவாதிக்கு மட்டும்தான்.ஒரு கொலைக் குற்றவாளியாக தன்னைக் கருதும் மலர்.போலீஸ் ஆஃபீசர் கதிருக்கு எப்படி மனைவியாகத் துணிவாள். பயம் மனசுக்குள் இருக்கத்தானே செய்யும்.

இல்லை மலர்

இல்லை மலர்

கதிர் போல கல்யாணத்தை என்ஜாய் பண்ண முடியலை மலருக்கு.தங்கச்சிதான் அவ்வப்போது அக்காவின் மூடை மாத்திவிடறா. இந்த கல்யாணம் நடக்க கூடாது சுவாதின்னுதான் மலர் அடிக்கடி தங்கையிடம் பேசும் வார்த்தை.கதிரோ ஐ லவ் யூன்னு மலர் எப்போதுதான் சொல்வாள் என்பதுதான். என்னதான் பெரியவர்கள்பார்த்து வச்ச கல்யாணம் என்றாலும், அதை லவ் மேரேஜாக மாத்தி, ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அதிகமாக லவ் பண்ணனும்னு கனவு காணுகிறான்.

மேட்டருக்கு வருவோம்

மேட்டருக்கு வருவோம்

கல்யாணத்துக்கு முன்னால அப்பாஅம்மா பொண்ணு மாப்பிள்ளையை வெளியில் அனுப்பி வைக்கறது சரியா? அதே மாதிரி இப்போ கல்யாணங்களில், கல்யாணத்துக்கு முன்பே பொண்ணு மாப்பிள்ளை போட்டோ சூட் மட்டுமில்லை...ஒரு தீம் வச்சு வீடியோ எடுத்து அதை குறும்படம் போல பார்த்துக்கறதும் தவிர்க்க முடியாத வழக்கமாய் இருக்கிறது.கல்யாணத்துக்கு முன்னால் வெளிநாடு போய்க்கூட இதை சூட் பண்ணிக்கிட்டு வர்றாங்க..

முன்னோர்கள் மனதில் நெகட்டிவ் எண்ணங்களை வச்சுக்கிட்டு,இப்படி செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்களா? இப்போது உள்ள இளசுகளிடம் எப்போதும் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரித்து உள்ளதால், இதை எல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X