Nayagi serial, உண்மையில் கிரிக்கெட் போர்டு இப்படித்தான் செயல்படுகிறதா? நம்பிக்கையின்மை!

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ஆனந்தியின் தம்பி, முத்து பதினெட்டு வயதுக்கு உள்ளவர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்திள் இருக்கான்.இவன் கிரிக்கெட் விளையாட்டுத் திறமையை திருதான் முறையாக பயிற்சியில் சேர்த்து வளர்த்து விடுகிறான்.

நடக்க இருக்கும் அடுத்த பெரிய போட்டியில் தான் இடம் பெறுவோம் என்று முத்து கனவு கண்டுகொண்டு இருக்க, செல்கஷன் கமிட்டியில் அதிக டொனேஷன் கொடுத்து மெம்பர் ஷிப்பாகி விடுகிறார் திருவின் அப்பா கலிவரதன்.

பிளேயர்கள் லிஸ்டில் திருவின் பெயர் வர முடியாதபடி, முதலில் இருந்த முத்துவின் பெயரை கலிவரதன் எடுத்து விடுகிறார். முத்து ஓடிவந்து அக்காவிடமும், மாமா திருவிடமும் சொல்கிறான். இதுக்கு காரணம் உங்க அப்பா கலிவரதன் சார்தான் அங்கிள்னு சொல்றான்.

நான்தான் நீக்கினேன்

நான்தான் நீக்கினேன்

திரு உங்க அப்பா இப்படி செய்து இருப்பாரா?என்னால் நம்ப முடியலை திருன்னு ஆனநிதி சொல்ல, கண்டிப்பா செய்வாரு ஆனந்தி.வா, அவரை பார்த்து கேட்டுட்டு வரலாம்னு கிரிக்கெட் போர்டு கவுன்சிலுக்கே போறாங்க. ஐயா, இங்கே யாரையும் சந்திக்க மாட்டார்.உங்க பேரை சொன்னதும்தான் வர சொல்லி இருக்கார்.வாங்க போலாம்னு ஒருத்தன் அழைச்சுட்டு போறான். முத்துவை பெயர் லிஸ்ட்டிலிருந்து எதுக்கு எடுத்தீங்கன்னு திரு கேட்கறான்.

உங்களுக்கு எப்படி

உங்களுக்கு எப்படி

பேரு லிஸ்ட் வெளியில் வரலை, அதுக்குள்ளே உங்களுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு கேட்கறார் வேற ஒரு மெம்பர். எப்படியோ தெரிஞ்சுதுங்க. உண்மை அதுதானே...நல்லா விளையாடற பையனை போர்டு செலக்ட் பண்ணலேன்னா என்ன அர்த்தம்னு திரு கத்தறான். ஆமாம், முதல் பெயரே முத்துன்னுதான் இருந்துச்சு.நான்தான் அதை எடுக்க சொல்லிட்டேன்.இன்னிக்கு சாயந்தரம் வெளியாகும் லிஸ்ட்டில் முத்து பெயர் இருக்காதுன்னு சொல்லிட்டு, எழுந்து வெளியில் வர்றார் கலிவரதன்.

பசங்க விளையாட்டு

பசங்க விளையாட்டு

உங்களை மாதிரி பசங்க இந்த விளையாட்டுக்கு லாயக்கு இல்லாதவங்க. நீங்க எல்லாம் இந்த கில்லி, கோலி இது விளையாடத்தாண்டா லாயக்கு. கிரிக்கெட் எல்லாம் பணக்காரங்க விளையாடற விளையாட்டு. இதுக்கு நீங்க ஆசைப்படக் கூடாது. இங்கே நாங்க வச்சதுதான் சட்டம்.எங்களுக்கு இந்த திறமை, முயற்சி இதெல்லாம் தேவையில்லை. பணமிருக்கறவங்க கிரிக்கெட் விளையாடலாம்னு சொல்றார்.

கிரிக்கெட்டை பார்க்க

கிரிக்கெட்டை பார்க்க

அப்போ எத்தனை கோடி ஏழை மக்கள் கிரிக்கெட் பார்க்கறாங்க. அவங்களில் ஒருத்தனுக்கு திறமை இருந்தால் அவன் ஏமாந்து இப்படி போக வேண்டியதுதானான்னு திரு கேட்க, அதுக்கு என்ன பண்றது ஏழையாகப் பொறந்தது அவன் தலை எழுத்துன்னு சொல்றார் கலிவரதன்.

இதைப் பார்க்கும் நிஜமான பயிற்சி கிரிக்கெட் வீரர்களின் நம்பகத் தன்மை போய்விடாதா? இப்போது தமிழ் நாட்டில் மாவட்டங்களின் கிரிக்கெட்டும் வேறு நடைமுறையில் இருக்கிறதே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X