»   »  பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 பேரின் வார சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 15 பேரின் வார சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 15 பேரின் சம்பள விபரம் என்று கூறி ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பளம்

சம்பளம்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதில் கலந்து கொண்டுள்ள 15 பேரின் சம்பள தகவல் தீயாக பரவியுள்ளது.

நமீதா

நமீதா

பிக் பாஸ் வீட்டில் உள்ள 15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம். டாப்பில் உள்ள நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறதாம்.

சினேகன்

சினேகன்

இரண்டாவது லெவலில் உள்ள சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளமாம்.

பரணி

பரணி

இறுதி லெவலில் இருக்கும் பரணி, ஜூலியானா, ஆரார், ரைசா ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

English summary
A list containing the salary details of the 15 contestants of the Big Boss show is doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil