»   »  வாணி ராணி சீரியலில் நடிப்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாணி ராணி சீரியலில் நடிப்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடிப்பவர்களின் சம்பளம் என்று கூறி ஒரு பட்டியல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் வாணி, ராணியும் ஒன்று. வாணிம்மா, ராணிம்மா என்று ரசிகர்கள் ராதிகாவை கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் அந்த தொடரில் நடிப்பவர்களின் சம்பள விபரம் என்று கூறி ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.

ராதிகா

ராதிகா

வைரலாகியுள்ள பட்டியலில் ராதிகாவின் சம்பள விபரம் இல்லை. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் வைரலாகியுள்ளது.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

கவுதமாக நடிக்கும் விக்னேஷ் குமாருக்கு ரூ. 10 ஆயிரமும், சூர்யாவாக நடிக்கும் அருண் குமார் ராஜாவுக்கு ரூ. 10 ஆயிரமும், சாமிநாதனாக வரும் ப்ரித்விராஜுக்கு ரூ. 15 ஆயிரமும் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

நீலிமா ராணி

நீலிமா ராணி

டிம்பிலாக வரும் நீலிமா ராணிக்கு எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரமும், சரவணனாக வரும் மானஸ் ஜாவனுக்கு ரூ. 8 ஆயிரமும், தேன்மொழியாக நடிக்கும் நேஹாவுக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படுகிறதாம்.

ஷாமிலி

ஷாமிலி

பூஜாவாக வரும் நம்பியா பாமினுக்கு ரூ. 10 ஆயிரமும், பவித்ராவாக நடிக்கும் ஸ்ருதி சண்முக ப்ரியாவுக்கு ரூ. 5 ஆயிரமும், ஸ்ருதியாக வரும் நிரஞ்சனிக்கு ரூ. 5 ஆயிரமும், ராகேஷாக வரும் சண்முகத்திற்கு ரூ. 5 ஆயிரமும், பூங்கொடியாக வரும் மகாலட்சுமிக்கு ரூ. 6 ஆயிரமும், கார்த்திகேயனாக நடிக்கும் ராஜ்குமார் மனோகரனுக்கு ரூ. 5 ஆயிரமும், காளியாக வரும் பாபோஸுக்கு ரூ. 15 ஆயிரமும், சுந்தரியாக வரும் சங்கீத பாலாவுக்கு ரூ. 15 ஆயிரமும், தேஜுவாக வரும் ஷாமிலிக்கு ரூ. 20 ஆயிரமும் அளிக்கப்படுகிறதாம்.

English summary
A list containing the salary details of the actors who are a part of the television series Vani Rani has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil