For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறீங்களா... குக் வித் கோமாளி புகழ் சொன்ன கலக்கல் பதில பாருங்க

  |

  சென்னை : டிவி ரியாலிட்டி ஷோக்களிலேயே மிகவும் புகழ்பெற்றதும், அதிக ரசிகர்களை கொண்டதுமானது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதுவரை 4 சீசன்கள் முடிந்து, அக்டோபர் மாதத்தில் 5 வது சீசன் துவங்கப்பட உள்ளது.

  9 வயதில் மகள்.. இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்! 9 வயதில் மகள்.. இரண்டாவது திருமணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்!

  இதற்காக சமீபத்தில் கலர்ஃபுல்லான கண்ணுடனான புதிய லோகோ வெளியிடப்பட்டு, அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ப்ரோமோக்கள் மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல் தான் தொகத்து வழங்க போகிறார்.

  அசத்தல் ப்ரோமோ

  அசத்தல் ப்ரோமோ

  பிக்பாஸ் சீசன் 5 க்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது முதல் நிகழ்ச்சி எப்போது துவங்கப்பட உள்ளது, யாரெல்லாம் பங்கேற்ற உள்ளார்கள் என்ற கேள்வி உலா வர துவங்கி விட்டது. போட்டியாளர்கள் பட்டியல் என தினம் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டு , பரபரப்பை கிளப்பை வருகிறது.

  அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

  அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

  பொதுவாக Odd number நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். மற்ற சீசன்களை விட முதல் மற்றும் மூன்றாவது சீசன்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று, பலரையும் கவர்ந்தது. இதனால் ஐந்தாவது சீசனை அதே போல் அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இவர்கள் தான் போட்டியாளர்களா

  இவர்கள் தான் போட்டியாளர்களா

  சமீபத்தில் வெளியான போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் என வெளியிடப்பட்ட பட்டியலில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, ஜி.பி.முத்து, ஷகீலாவின் மகள் மிளா, துள்ளுவதோ இளமை அபினவ், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, 90 மஎம்எல் படத்தில் நடித்த மசூம் ஷங்கர், சுசன் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களுடன் குக் வித் கோமாளி புகழும் பிக்பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.

  புகழின் செம பதில்

  புகழின் செம பதில்

  இது பற்றி புகழிடம், நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறீர்களா என கேட்கப்பட்டது. இதனை மறுத்துள்ள புகழ், தனக்கே உரிய ஸ்டையிலில் நக்கலாக , நான் என் வீட்டுக்கு தான் போக போறேன். இது மாதிரி எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என கலகலப்பாக பேசினார்.

  முதல் பரிசு 25 லட்சம்

  முதல் பரிசு 25 லட்சம்

  சமீபத்தில் மறைந்த விவேக் தொகுத்து வழங்கிய லெல் எங்க சிரி பாப்போம் என்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், கடைசி வரை தான் சிரிக்காமல், மற்றவர்களை சிரிக்க வைத்தார். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த காமெடி ஷோவில் வெற்றி பெற்ற புகழுக்கு முதல் பரிசாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

  அவ்வளோ வாங்கல

  அவ்வளோ வாங்கல

  சமீபத்தில் இந்த தகவல் வெளியாகி, வைரலானது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என புகழே விளக்கி உள்ளார். இந்த நிகழ்ச்சி மூலம் புகழ் 25 லட்சம் எல்லாம் பெறவில்லையாம். இந்த பரிசுத் தெகை கடைசியாக வந்த 2 போட்டியாளர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டதாம். இதில் வரி போன்ற பிடித்தங்கள் போக ரூ.7.5 லட்சம் தான் புகழ் கையில் கிடைத்ததாம். 25 லட்சங்களை பெறவில்லை என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

  படங்களில் பிஸி

  படங்களில் பிஸி

  புகழ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், குக் வித் கோமாளி நிகழ்ச்சி அஸ்வின் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் என்பது உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த சமயத்தில் பிக்பாஸில் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக வெளியான தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் அதையும் புகழ் மறுத்து விட்டார்.

  English summary
  cook with comali fame pugazh denied that he will enter in to the bigg boss season 5 house for contestant. He replied that he will go to his house only. pugazh's this reply was loved by everyone.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X