ஏம்மா விஜி, இதுக்குத் தான் உங்களை நாயகி சீரியலில் இருந்து பிக் பாஸ் அழைத்து வந்தாரா?
Recommended Video

சென்னை: நாயகி சீரியலில் இருந்து அழைத்து வரப்பட்ட விஜயலட்சுமியை பார்த்து பார்வையாளர்கள் இப்படித் தான் கூறுகிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டின் முதல் ஒயில்டு கார்டு என்ட்ரி விஜயலட்சுமி. நாயகி தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தவரை அதில் இருந்து வெளியேற வைத்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அம்மணி வந்ததும் பிக் பாஸ் வீடு களைகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பில்ட்அப்
விஜய்லட்சுமி வருகிறார் அனைவரும் கிளம்புங்க. அவர் தான் ஜெயிக்கப் போகிறார் என்று தமிழ் படம் 2 இயக்குனர் அமுதன் வேறு ட்விட்டரில் பயங்கரமாக பில்ட் அப் கொடுத்தார். சரி பொண்ணு பிக் பாஸ் நிகழ்ச்சியை செம பரபரப்பாக்கிவிடுவார் போன்று என்று எதிர்பார்த்தால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்.

ஒயில்டு கார்டு
கடந்த சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்த பிந்து மாதவிக்கும் பில்ட்அப் மட்டும் பலமாக கொடுத்தார்கள். ஆனால் அவரும் ஒன்னும் செய்யவில்லை. தற்போது விஜயலட்சுமியும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். இதற்காகத் தான் உங்களை சீரியலில் இருந்து பிக் பாஸ் அழைத்து வந்தாராம்மா என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜயலட்சுமி
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களை பற்றி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு வந்திருக்கும் விஜயலட்சுமி அவசரப்படாமல் சேஃபாக விளையாடுகிறார் போன்று. இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் எந்த நேரத்திலும் விஸ்வரூபம் எடுப்பார் என்று பார்வையாளர்கள் இன்னும் நம்புகிறார்.

போட்டியாளர்கள்
இதுவரை கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் விஜயலட்சுமி பார்வையாளர்கள் கவனிக்கும்படி ஏதாவது செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய ப்ரொமோ வீடியோவில் சென்றாயனை கண்டிக்கிறார் விஜி. ஆனால் இந்த ப்ரொமோ வீடியோவை நம்ப முடியாது. ஏனென்றால் ப்ரொமோவில் ஒன்று காட்டுவார்கள், நிகழ்ச்சியில் வேறொன்றை காட்டுவார்கள்.


Click it and Unblock the Notifications











