Naam iruvar namakku iruvar serial: பழிவாங்க ஜாக்கெட்டில் கத்திரி வைப்பாங்களா?

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாயன் தேவி ஜோடிக்கும், அரவிந்த் தாமரை ஜோடிக்கும் முதல் கல்யாண நாள் கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

மாயன், அரவிந்த் இருவரும் இரட்டையர்கள். இந்த இரட்டையர்களாக இரு வேடத்தில் ஆர்.ஜெ.செந்தில் நடிக்கிறார். அதே மாதிரி இருவருக்குமே கல்யாணமும் வித்தியாசமாக நடந்து இருக்கிறது.

அரவிந்த் தாலி கட்ட இருந்த தேவி கழுத்தில் மாயனும், மாயன் கட்ட வேண்டிய தாமரை கழுத்தில் அரவிந்தும் தாலி கட்ட வேண்டியதாகி விடுகிறது.

வாபஸ் கேஸ்

வாபஸ் கேஸ்

தாமரையை டாக்டர் அரவிந்துக்கும், அவன் அம்மாவுக்கும் கூட பிடிக்கலை. இதனால், விவாகரத்து கேஸ் போட்டு விடுகிறார்கள். .அதுவரை இருவரும் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டுமே... அதனால், ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.போகப் போக இருவருக்கும் பிடித்துப்போக சேர்ந்து வாழ்வது என்று முடிவுக்கு வந்து, அரவிந்த் அம்மா சம்மதத்துடன் விவாகரத்து கேஸை வாபஸ் வாங்கி விடுகிறார்கள்.இப்போது முதல் திருமண நாள் அன்றுதான் இவர்களுக்குள் சாந்தி முகூர்த்தம் நடக்க இருக்கிறது.

மாயன் தேவி

மாயன் தேவி

தேவிக்கு மாயனைப் பிடித்து இருந்தாலும், அவனை தேவி வீட்டில் யாரும் ஏத்துக்க மறுக்கறாங்க. அதனால், தேவியும் அவர்கள் பேச்சை மீறாமல் விவாகரத்து கேஸ் போட்டு, இன்னும் மூன்று நாட்களில் தீர்ப்பு வர இருக்கிறது.இந்த நேரத்தில்தான் இவர்களின் முதல் கல்யாண நாள் கொண்டாட்டமும் நடக்க இருக்கிறது. இதை அரேன்ஜ் செய்தவர் இரட்டையர்களின் அப்பா குஸ்தி வாத்தியார்தான்.மாமனார் கூப்பிட்டதால் மறுக்க முடியாமல் மாமனார் வீட்டுக்கு மாயனுடன் வந்திருக்கிறாள் தேவி.

மகராணியா மருதாணியா

மகராணியா மருதாணியா

மருதாணியா இவ மகராணியா என்பது போல, இரட்டையர்கள் இருவரும் தங்களது மனைவிக்கு மருதாணி வைக்க வேண்டுமாம். யார் கை சிவக்கிறதோ அவர்கள் புருஷன் மனதில் மகாராணி போல அமர்ந்து இருப்பார்கள்.தவிர பரிசும் உண்டு. இது விஜய் டிவியின் அறந்த பழசான போட்டிதான் என்றாலும், ரேட்டிங் வருதேன்னு மாயனே கலாய்க்கிறார். எதிர்பார்த்தது போல மாயன் ஜோடி ஜெயித்து விடுகிறார்கள்.

டாக்டர் அரவிந்தின் அக்கா

டாக்டர் அரவிந்தின் அக்கா

டாக்டர் அரவிந்தின் அக்கா வேண்டுமென்றே தேவியிடம் வம்பிழுக்க, அவள் உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லைன்னு சொல்லிட்டு போறா. இதில் கடுப்பான அரவிந்தின் அக்கா, தேவியின் ஜாக்கெட்டை தைத்து வந்து ஒரு ஆள் கொடுக்க ,அதை வாங்கிப் பார்த்த அக்கா, இருடி என்னையா அலட்சியமா பேசறே...உன் ஜாக்கெட்டை ஒரு வழி பன்றேன்னு, அந்த புத்தம் புது ஜாக்கெட்டை கத்திரி கோலால் கட் செய்துவிட்டு, பின்பு அதே போல மடித்து,தேவியிடம் கொடுத்து விடுகிறாள்.

இப்படியும் சில பெண்கள்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X