பிக் பாஸ் 2 ஃபினாலேவில் தேவர் மகன் 2 அறிவிப்பு வெளியிடுகிறாரா கமல்?

By Siva

சென்னை: பிக் பாஸ் 2 ஃபினாலேவுக்கு கமல் அணிந்துள்ள உடையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று இரவு நடைபெறுகிறது. பிக் பாஸ் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு ஐஸ்வர்யாவுக்கு பதில் ரித்விகாவை டைட்டில் வின்னராக அறிவிக்கப் போகிறாராம்.

இது இந்த காட்சியை பார்க்கத் தான் பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கமல்

பிக் பாஸ் 2 ஃபினாலே குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கமல் தேவர் மகன் கெட்டப்பில் வருகிறார். இது முடிவல்ல, பல பயணங்களின் ஆரம்பம் என்று அவர் சொல்வதை கேட்பதை விட அவர் உடை மீது தான் பார்வையாளர்களின் கண்கள் செல்கிறது.

தேவர் மகன் 2

தேவர் மகன் 2

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் இந்தியன் 2 படம் எடுக்கப் போவதாக இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் கமலின் கெட்டப்பை பார்த்தால் இன்றைய மேடையில் தேவர் மகன் 2 வரும் என்று அறிவிப்பு வெளியாகுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

சால்வை

வேட்டி, சட்டைக்கு யாராவது ஷால் போடுவாங்களா கமல் சார், என்ன உடை இது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ கடுப்பாகி யார் அந்த காஸ்டியூம் டிசைனர் என்று கேட்டுள்ளனர்.

அரசியல்

அரசியல்

பிக் பாஸ் மேடையை பயன்படுத்தி கமல் ஹாஸன் அரசியல் பேசினார், தனது விஸ்வரூபம் 2 படத்திற்கு சிறப்பாக விளம்பரம் தேடினார். இந்நிலையில் பிக் பாஸ் 3 சீசனையும் அவரே தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த சீசனுடன் பிக் பாஸை கைகழுவுமாறு ரசிகர்கள் பலர் கமலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X