Sun Tv Serials: கண்மணி சீரியல் முடியப் போகுதா... இல்லை கனவா?

சென்னை: தெய்வ மகள் சீரியலில் நடித்த கிருஷ்ணா மீண்டும் சீரியலில் நடிக்கிறார் போலும். அதன் ப்ரோமோ சன் டிவியில் கடந்த வாரம் முதல் ஒளி பரப்பாகிட்டு வருது. வெளிநாட்டில் முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு வந்துள்ளார்கள் போலும்

இது பிரைம் டைம் சீரியலாக இருக்கும் என்பதால் எந்த சீரியல் இப்போது முடியும் என்கிற, வாக்கு வாதத்துக்கு சீரியல் ஆர்வலர்கள் தயாராகி உள்ளனர். ப்ரோமோவின் உங்கள் சன் டிவியில் விரைவில் என்றுதான் போடுகிறார்களே தவிர சீரியல் பெயர்,நாள், நேரம் அறிவிக்கவில்லை.

இப்போது சீரியல் ஆர்வலர்கள் பேசிக்கொள்ளும் விஷயம் எந்த சீரியல் இப்போது முடியும் நிலையில் இருக்கிறது என்பதுதான். தொடர்ந்து சீரியல் பார்க்கும் அவர்களுக்கும் ஆர்வம் இருக்காதா என்ன?

நாயகியை இனி எப்படி

நாயகியை இனி எப்படி

நாயகி சீரியலில் கிட்டத்தட்ட எல்லாமே முடிந்த மாதிரி ஆகிவிட்டது. சொத்துக்களுக்கு ஆனந்திதான் வாரிசு என்றும் தெரிந்து விட்டது. இந்த சமயத்தில், தான் கர்ப்பம் என்றும், இந்த கரப்பத்துக்கு திருத்தான் காரணம் என்று கோர்ட்டு படி ஏறி இருக்கிறாள் அனன்யா. அரசு மருத்துவரே அனன்யா கர்ப்பம்தான் என்று உறுதி செய்துவிட்ட நிலையில், இது சாத்தியமே இல்லை ஆனந்தி என்று சொல்கிறான் திரு. ஆனால், ஆனந்திக்கு இப்படியும் ஒரு பெண் பொய் சொல்லுவாளா, அனன்யா தன்னை மாதிரி திருவைத்தானே உயிருக்கு உயிரா காதலிச்சாள்... வேறு யாருடன் இவளுறவு கொண்டு இருக்க முடியும் என்கிற குழப்பத்தில் இருக்கிறாள். இதில் இனி விஷயம் அவ்வளவாக இல்லாததால் விரைவில் நாயகி முடியலாம் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.

முத்துச்செல்வி நாடகம்

முத்துச்செல்வி நாடகம்

முத்துச்செல்வி ,சின்னவரை சவுந்தர்யாவுக்கே கட்டி வைத்துவிட நினைத்து நாடகம் நடத்தி வருவதால், அந்த நாடகத்தின் கடைசி கட்டம் வரை கண்மணி சீரியல் விறுவிறு என்று வந்துள்ளது. அது மட்டுமா, என்னவோ, சவுந்தர்யாவுக்கும், கண்ணனுக்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை மூச்சா போய்விட, எத்தனை தடவை மூச்சா போவே... அம்மாவுக்கு வேலை வைக்கிறோமேன்னு நினைக்க மாட்டியா. ஊரெல்லாம் தண்ணிப் பஞ்சம் வந்தாலும், உன் டேங்க் மட்டும் ஓவர் ஃபுல்தான் என்று சவுந்தர்யா சொல்லிக்கொண்டே செல்வது போலவும் இன்றைய ப்ரோமோ இருப்பதால், கண்மணி சீரியலுக்கு பதிலாகத்தான் இந்த புது சீரியலோ என்று ஒரு சாரார் பேசி வருகிறார்கள்.

மறு ஒளிபரப்பு பிரியமானவள்

மறு ஒளிபரப்பு பிரியமானவள்

மதிய நேரத்தில் பிரியமானவள் சீரியல் மறு ஒளிபரப்பு செய்துகிட்டு வர்றாங்க.ஒரு வேளை அதை நிறுத்திட்டு, புது சீரியலை ஒளிபரப்புவார்கள் என்று ஒரு சாராரும் பேசி வருகிறார்கள். ஆனால், இந்த ப்ரோமோ பற்றி பேசாத சீரியல் ஆர்வலர்கள் இல்லை எனலாம். காரணம் கிருஷ்ணா தெய்வ மகள் சீரியல் மூலம் இவர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் நடிக்கும் சீரியல் என்றால் நன்றாக இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு இவர்களிடம் மேலோங்கி உள்ளது.

ராஜ் கபூர் இயக்குநர்

ராஜ் கபூர் இயக்குநர்

புது சீரியலில் இயக்குநர் ராஜ் கபூர் இந்த சீரியலில் நடிக்கிறார் என்று ப்ரோமோவின் மூலம் அறியப்படுவதால், குஷ்பூ நிறுவனத்தின் இன்னொரு சீரியலாக இது இருக்குமோ என்கிற எண்ணமும் எழுந்துள்ளது. தெய்வ மகள் சீரியலுக்கு பின்னர் வாய்ப்பு இல்லாமலிருந்த கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. சேர்ந்து நடித்த வாணிபோஜனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.சிறிது காலம் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவின் நடுவராக மட்டுமே பங்கு ஏற்றார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X