Barathi Kannamma Serial: கண்ணம்மா திமிர் பிடிச்சவளா? இருந்தாலும்... ஆஹா மாமியார்!

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் அப்பிராணி பெண்ணான கண்ணம்மாவை திமிர் பிடிச்சவன்னு மாமியார் சவுந்தர்யா அம்மா சொல்றாங்க. இருந்தாலும் ஆஹா மாமியார்னு பாராட்டும் அளவுக்கும் ஒரு கருத்து சொல்லி இருக்காங்க.

Recommended Video

BHARATHI KANNAMMA TODAY FULL EPISODE | |FILMIBEAT TAMIL

கண்ணம்மா வருணிடம் நெருங்கி பேசிகிட்டு இருக்கா ஆன்ட்டின்னு வெண்பா போட்டுக்கொடுக்க, அவ திமிர் பிடிச்சவதான்.. அழகு இல்லாதவதான்.. ஆனால், கேரக்டரில் ரொம்ப சுத்தமானவ...

அவ ஒழுக்கத்தை பத்தி யார் என்ன சொன்னாலும் அதை நான் நம்பமாட்டேன்னு சொல்றாங்க சவுந்தர்யா அம்மா. அப்படி பார்க்கப் போனால் அவங்க ஆஹா மாமியார்தானே...!

கண்ணம்மா பாரதி

கண்ணம்மா பாரதி

கருப்பு கண்ணம்மாவை காதலிச்சு டாக்டர் பாரதி கல்யாணம் செய்துக்கறான். இது அவங்க அம்மா சவுந்தர்யா அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை. கறுப்புன்னா அவங்களுக்கு அலர்ஜி.. இப்படி கொண்டு போன கதையை கொஞ்சமா மாத்தி குழந்தை இல்லேன்னு கரிச்சுக் கொட்ட ஆரம்பிச்சாங்க. இதுக்கு காரணம் யார்னு பார்த்தால் வென்பாதான்.

பாரதி வெண்பா

பாரதி வெண்பா

படிக்கும்போதே பாரதியை ஒன்சைடா காதலிச்ச வெண்பாவுக்கு பாரதி கிடைக்கலேன்னு பொறாமை வந்துருது. அவனை எப்படியாவது தான் கல்யாணம் செய்துக்கணும்னு பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் குழந்தை பிறக்காதபடி சதி செய்துவிடுகிறாள். அவள்தான் டாக்டராச்சே! பாரதியை கல்யாணம் செய்துக்க பல முயற்சிகளை செய்கிறாள்.

பள்ளியில் படித்தவர்கள்

பள்ளியில் படித்தவர்கள்

பள்ளியில் படித்தவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்கிறார்கள் என்று, கண்ணம்மா அஞ்சலி உடன் படித்தவர்கள் மீட்டிங் நடக்குது. அதில் வருண் என்பவன் கண்ணம்மாவை படிக்கும்போதே உருகி உருகி காதலிச்சு இருக்கான். கருப்பு பெண் என்று ஒதுக்கப்பட்ட கண்ணம்மாவுக்கும் வேல்யூ இருந்து இருக்கிறது என்று காண்பித்து இருக்காங்க... இது நல்லாருக்கு.

பொளேர் அடி

பொளேர் அடி

கண்ணம்மாவும், வருணும் ராத்திரி நேரத்தில் குளிர்காய்ந்துக் கொண்டே பேசிக்கொண்டு இருப்பதை பாரதியிடம் காண்பித்த வெண்பா, இப்போ வெளியில் பேசிகிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னால ரூமில் தப்பு செய்து இருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் பாரதின்னு கேட்டு, பாரதி கையால் பொளேர்னு அடி வாங்கி உட்கார்ந்து இருக்கா.

ஆஹா மாமியார்

ஆஹா மாமியார்

ஆஹா மாமியார் என்று சொல்லும்படி இன்னிக்கு ஒரு விஷயம் நடந்து இருக்கு. அதாவது,சரி இந்த விஷயத்தை ஆன்ட்டிகிட்டே போட்டுக் கொடுக்கலாம்னு, சவுந்தர்யா அம்மாகிட்டே போன் செய்து வெண்பா பேசறா. ஆன்ட்டி.. கண்ணம்மாவும் வருணும் விடிய விடிய தனியா பேசிகிட்டு இருந்தாங்க.. அதனால் பாரதிக்கிட்டே கண்ணம்மவிடம் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோன்னு சொன்னேன்.. அதுக்கு போயி என்னை அடிச்சுட்டான் ஆன்டின்னு சொல்றா. அப்போதுதான் அவங்க சொல்றாங்க.. கண்ணம்மா அழகு இல்லாதவதான்.. அவ திமிர் பிடிச்சவதான்.. ஆனா, அவ ஒழுக்கத்தை பத்தி யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.. இந்த விஷயத்துல கண்ணம்மா ரொம்ப நல்லவன்னு சொல்லி, வெண்பாவை கடுப்பேத்திட்டாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X