பிக் பாஸுக்காக அட்ஜஸ்ட் செய்யும் மும்தாஜ்?

By Siva

சென்னை: மும்தாஜ் பிக் பாஸின் மனம் அறிந்து நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மும்தாஜ் என்றதும் அவரும் அனைவர் மீதும் அன்பாக இருப்பார் என்று சொல்லும்படி நடந்து கொள்கிறார். மேரி பேட்டி, பேட்டா, பச்சா என்று பாச மழை பொழிவார்.

ஐஸ்வர்யா மீது தற்போது அவருக்கு கூடுதல் பாசம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இத்தனை வாரங்களாக நாமினேட் ஆகாமல் இருந்ததற்கு பிக் பாஸ் தான் காரணம் என்பதை மும்தாஜ் புரிந்து கொண்டுள்ளார். அதனாலோ என்னவோ கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மீது தனிப் பாசம் வைத்துள்ளார். சில சமயங்களில் ஐஸ்வர்யா மும்தாஜை விரட்டிவிட்டாலும் பின்னர் அவரிடம் தானாகப் போய் பேசுகிறார்.

அன்பு

அன்பு

நாமினேஷனின் போது கூட பிறர் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்வதற்கான காரணத்தை கூறியதும் மும்தாஜ் அவர் முதுகில் தடவிக் கொடுத்தார். ஐஸ்வர்யா போன் டாஸ்கின்போது சென்றாயனின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரை ஏமாற்றியது தெரிந்தும் மும்தாஜ் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வர வர ஐஸ்வர்யா விஷயத்தில் மும்தாஜ் பிக் பாஸ் மாதிரியே நடந்து கொள்கிறார்.

ஷில்பா ஷிண்டே

ஷில்பா ஷிண்டே

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டேவை காப்பியடிக்கிறார் மும்தாஜ் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மும்தாஜின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த காட்சி கூட இந்தி பிக் பாஸில் இருந்து அதுவும் ஷில்பாவின் அம்மா வந்தபோது நடந்ததை காப்பியடித்துள்ளனர். இதை எல்லாம் பார்த்தால் பிக் பாஸ் மும்தாஜுக்கு ரகசிய டாஸ்க் கொடுத்து அவரை ஷில்பா மாதிரி நடிக்க வைக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோபம்

கோபம்

ஐஸ்வர்யா செய்யும் பல விஷயங்கள் மும்தாஜுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டு அவரிடம் போய் பேசுகிறார், பாசம் காட்டுகிறார். ஒரு வேளை பிக் பாஸ் தான் மும்தாஜை ஐஸ்வர்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருப்பாரோ? அதனால் தான் மும்தாஜ் ஐஸ்வர்யா மீது கோபம் ஏற்பட்டாலும் காட்டுவது இல்லையோ?. பிக் பாஸ் மனதை குளிர வைக்க அட்ஜஸ்ட் செய்கிறாரா மும்தாஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X