twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Lady super star: உண்மையில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா?

    |

    சென்னை: உண்மையில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? இந்த கேள்வியை எல்லாருமே யோசித்து பார்க்க வேண்டிய காலக் கட்டம் இது. சூப்பர் ஸ்டார் என்றால் என்ன, யாரை அப்படி அழைக்கலாம் என்று தெரிந்துக் கொள்ளாமலே எதையும் நாம் ஏற்றுக்கொள்ளலாமா?

    நயன்தாரா நடித்த எத்தனை படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன? அதுவும் அவருக்காக என்று எத்தனை படங்கள் வசூலைக் குவித்தன? எத்தனை வருடங்கள் கழித்து அவருக்கு என்று ஒரு பெயரை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது?

    எல்லாத்தையும் விட அதிரடி, ஆக்ஷன் என்று எத்தனை படங்களில் சாதித்து, மிரள வைத்திருக்கிறார். ஹீரோக்கள் இல்லாமல் டம்மி ஹீரோவுடன் நயன் நடித்த எத்தனை படங்கள் ஹிட் அடித்தன?

    லேடி சூப்பர் ஸ்டார்

    லேடி சூப்பர் ஸ்டார்

    நடிகை விஜயசாந்தி இப்போது ஆந்திரா, தெலுங்கானா என்று அரசியல் வாழ்க்கையில் முழுவதுமாக களம் இறங்கி இருந்தாலும், எண்பது, தொன்னூறுகளின் அத்தனை ஆண் சூப்பர் ஸ்டார்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். ஒரே படம் வைஜயந்தி ஐபிஎஸ். சரியான அதிரடி படம். ஐபிஎஸ் வேடத்தில் நடித்த விஜயசாந்தி ஐபிஎஸ் ஆக அப்படியே பொருந்தி இருந்தார். ஆந்திரா முழுவதும் படம் வசூலை வாரி வாரி குவிக்க, தமிழிலும் படம் டப் செய்யப்பட்டது.

    பாரதிராஜா படத்தில்

    பாரதிராஜா படத்தில்

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. நல்ல உயரம், மெல்லிய உடல்வாகு என்று அவ்வளவு அழகு. ஆனால், சென்னையில் பிறந்து, சென்னையில் வளர்ந்த தெலுங்கு பெண்ணான விஜயசாந்திக்கு தமிழ் பட இன்டஸ்ட்ரி சுத்தமாக கை கொடுக்கவில்லை. ஆந்திரா பக்கம் போன பின் முதலில் நல்ல நடிகையானார். விஜயசாந்தி அவ்வளவு கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் ஆந்திர ரசிகர்களுக்கு விஜயசாந்தியை அவ்வளவு பிடித்து போனது.

    வைஜயந்தி ஐபிஎஸ் தமிழில்

    வைஜயந்தி ஐபிஎஸ் தமிழில்

    வைஜயந்தி ஐபிஎஸ் தமிழில் டப் செய்யப்பட்டு, வெளியான போது தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் விஜயசாந்தி, வைஜயந்தி ஐபிஎஸ் ஆக பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து பூவுக்குள் பூகம்பம், லாக்கப் என்று அத்தனை அதிரடிப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ,விஜய சாந்திக்காகவே தியேட்டர்களில் கல்லா களைக்கட்டியது. தென்னகத்தின் ஜாக்கிசான் என்று தெலுங்கு, ஆந்திர ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

    சண்டை காட்சிகளில் டூப்

    சண்டை காட்சிகளில் டூப்

    விஜயசாந்தி சண்டை காட்சிகளில் அவ்வளவாக டூப்போட்டதே இல்லை. ரிஸ்க் எடுத்து,சூப்பராக நடித்து கொடுத்து விடுவார். திரைப் படங்களில் நடித்து முடிக்கும் வரை எந்த கிசு கிசுக்களிலும் சிக்கியதில்லை. இந்த அதிரடிக்காகத்தான் இயக்குநர் பி.வாசு மன்னன் படத்தில் விஜயசாந்தியை நடிக்க வைத்தார். இப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் வாங்குவதற்கு விஜய சாந்தி பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

    அப்படி சொல்லிக்கோங்க

    அப்படி சொல்லிக்கோங்க

    விஜயகாந்த், கமல்ஹாசன்,ரஜினிகாந்த் சண்டை காட்சிகளில் நடித்தால் நம்மால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறதோ அப்படித்தான் விஜயசாந்தி நடித்த சண்டை காட்சிகளும் தத்ரூபமாக இருந்து ரசிகர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. நயன்தாரா நல்ல நடிகை என்றால் அப்படி வைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத பட்டத்தை அவங்க கால்ஷீட் வேணும்னு நீங்கள் தருவதை ரசிகர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கணுமா? நயன்தாரா உழைக்கிறார்... இருந்தாலும் இப்படி சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்க இன்னும் கடுமையான உழைப்பு தேவைங்க...

    அப்புறம் ரசிகர்களாகிய உங்க இஷ்டம்.. என்னங்க நான் சொல்றது சரிதானே.. !

    English summary
    Actress Nayanthara Lady Superstar? This is the time when everyone should ponder this question. Can we accept anything without knowing what a superstar is and who can be called that?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X