தம்பியே ரசிக்கற அழகம்மை குடும்பத்தை பூர்ணா உடைக்க போறாளா?

சென்னை: சன் டிவியின் அழகம்மை சீரியலில் பூர்ணாவின் தம்பி மதன் காவ்யாவை கல்யாணம் செய்துக்கறான்.

பூர்ணாவும் ,மதனும் தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் பிள்ளைகள். பூர்ணா அழகம்மையின் சின்ன மருமகள்.இப்போதுதான் சகுந்தலா தேவியின் மகள் என்று பூர்ணாவை டிடெக்டிவ் அடையாளம் கண்டு ஒப்படைச்சு இருக்காங்க.

தம்பி மதன் தனக்கு பிடிக்காத தனது மாமியார் அழகம்மை வீட்டில் தங்கி இருப்பத்தைக் கெடுத்து, மதனை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நல்லவள் போல திரும்பவும் மருமகளாக அழகம்மை வீட்டுக்கு வந்திருக்கா பூர்ணா.

பூர்ணா சுதா

பூர்ணா சுதா

பூர்ணா தனது அம்மா சகுந்தலா தேவிகிட்ட மதனை திருப்பி நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வருவேன்...அழகம்மை குடும்பத்தை கெடுத்தே தீருவேன்னு போன்லே பேசிக்கிட்டு இருக்கா. அதுக்குத்தான் இந்த வீட்டில் நல்ல மருமகள் போல நுழைஞ்சு இருக்கேன்னு சொல்றா.

சுதா நிக்கறா

சுதா நிக்கறா

அம்மாகிட்ட பேசிட்டு திரும்பிப் பார்த்தால்... அங்கே அழகம்மையின் மூத்த மருமகள் சுதா நிக்கறா, அதிர்ச்சி அடைஞ்ச பூர்ணா, சுதாவின் பின்னால் பார்க்கறா. பயப்படாத நான் மட்டும்தான் உன்னோட சதித் திட்டத்தை கேட்டுகிட்டு நிக்கறேன்.என்னைத் தவிர இங்கே யாரும் இல்லைன்னு சொல்றா சுதா.

அழகம்மை குடும்பத்தை

அழகம்மை குடும்பத்தை

ஆமாம் சுதா... நான் அழகம்மை குடும்பத்தை உடைக்கத்தான் வந்தேன்... பாசத்தால் ஒன்று பட்ட குடும்பம்னு பெருமை பீத்திக்கறீங்களே..அந்த பெருமையை உடைச்சு ,ஆளுக்கு ஒரு பக்கமா பிரியற மாதிரி செய்ய போறேன்னு சவால் விடறா பூர்ணா

சேர்க்கறதுக்கு சவால்

சேர்க்கறதுக்கு சவால்

நல்லா இருக்கும் குடும்பத்தை உடைக்கறதுக்கே நீ இவ்ளோ தில்லா சவால் விடறேன்னா.அதை நீ செய்யாம உன்னை தோத்துப் போக வைக்க நான் எவ்ளோ தில்லா சவால் விடனும்.முடிஞ்சா நீ செய்து பார். ஒவ்வொரு தடவையும் என்கிட்டே தோத்து போயி நிப்பேன்னு சொல்றா சுதா.

குடும்பத்தோட கோயிலுக்கு

குடும்பத்தோட கோயிலுக்கு

குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்தோட போறது பத்தியும், அதுக்கு எப்படி தயாராகிறது என்பது பத்தியும் குடும்பமே உட்கார்ந்து பேசறதைப் பார்த்த மதன் யோசனையில் உட்கார்ந்து இருக்கான்.

யோசனையில் இருக்கீங்க

யோசனையில் இருக்கீங்க

மதன் இப்படி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த அழகம்மை , மதன் என்ன இப்படி ஏதோ யோசனையில் உட்கார்ந்து இருக்கீங்கன்னு கேட்கறாங்க. இல்லை அத்தை இந்த வீட்டில் சின்ன விஷயமா இருந்தாலும் எப்படி குடும்பத்தோட உட்கார்ந்து பேசுறீங்க. சாப்பிடும்போது கூட ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடணும்னு நினைக்கறீங்க... எங்கள் வீட்டில் யார் இருக்காங்க.. இல்லைன்னு கூட தெரியாது அத்தைன்னு சொல்றான்.

அழகம்மையின் இந்த குடும்பத்தை தம்பி ரசிக்க, இதே குடும்பத்தை உடைப்பேன்னு சபதம் போட்டு இருக்கா அக்கா பூர்ணா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X