Pournami: அதிர்ஷ்டம் இல்லாதவளா பவுர்ணமி.. இதென்னடி கொடுமை?

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமி அதிர்ஷ்டம் இல்லாதவள்னு அப்பா சக்ரவர்த்தி சொன்னது உண்மையாகிப் போச்சே...

தொழிலதிபர் சக்ரவர்த்தியின் முதல் மனைவி பிரசவத்தின் போது இறந்துடறாங்க. மனைவி பிரிவைத் தாங்க முடியாத சக்ரவர்த்தி, பிறந்த குழந்தை அதிர்ஷ்டம் இல்லாதவன்னு முடிவு பண்ணிடறார்.

அவரைப் பொறுத்தவரைக்கும் பவுர்ணமி அவர் பொண்ணு இல்லை. ரெண்டாவது சம்சாரத்துக்கு பிறந்த பவானி மேல சக்ரவர்த்திக்கு உசிரு.

பவுர்ணமி ராம்கி

பவுர்ணமி ராம்கி

ராம்கியும், பவுர்ணமியும் பள்ளியில் ஒண்ணா படிச்சவங்க. திடீர்னு கல்லூரி படிப்பெல்லாம் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒரு நாள் சந்திச்சுக்கறாங்க. அப்போ ராம்கிக்கு பவுர்ணமி மேல காதல் வருது. பவுர்ணமிக்கு ராம்கி என்றால் மனசுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத்தான் செய்யுது. பவுர்ணமி தங்கை பவானிக்கு ராம்கி மேல அவன் யாருன்னு தெரியாமலே காதல் வந்துருது. அப்பா பவானி உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாமான்னு கேட்கறார். இல்லைப்பா நான் ஒருத்தனை மனசுல வச்சு இருக்கேன்..சக்ஸஸ் ஆனா சொல்றேன்னு சொல்றா.

சிஷ்யன் ராம்கி

சிஷ்யன் ராம்கி

ராம்கியோட சிஷ்யன் அண்ணிக்கு லெட்டர் எழுதிக் குடுங்க அண்ணா..நானே போயி லெட்டரை குடுத்துட்டு வரேன்னு சொல்றான் ராம்கியும் சின்ன பையன்கிட்ட குடுக்கலாமான்னு யோசிக்காம லெட்டர் எழுதிக்கொடுக்க, அதை சக்கரவரத்தி வாங்கி...ஓ பவானி ஏற்கனவே சொன்னப் பையன் போல இருக்குன்னு லெட்டரை வாங்கி பவானிகிட்ட குடுத்துடறார். இந்த இடத்திலும் பவுர்ணமிக்கு அதிர்ஷ்டமில்லையோ... அவளுக்கு வர வேண்டிய லெட்டர்...இப்போது பவானி கையில் காதல் கடிதமாக.

பவானிக்கு நிச்சயதார்த்தம்

பவானிக்கு நிச்சயதார்த்தம்

ராம்கிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லேன்னாலும் பவுர்ணமியை கல்யாணம் செய்தால்,ஒ ரு பைசா வரதட்சணை தேறாதுன்னு, ராம்கியின் அப்பா அம்மா ராம்கிக்கு பவானியை பேசி முடிச்சுடறாங்க. பவானிக்கு சுத்தமா மாப்பிள்ளை யாருன்னு தெரியாது. பவானிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்போது. அவ இங்க இருக்கக்கூடாது வசந்தின்னு சொல்றார் பெத்த அப்பா சக்ரவர்த்தி.பவுர்ணமி அழுதுகிட்டே வெளியில போகும்போது, ராம்கி அவளை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வர்றான்.

பெற்றோர் ராம்கி

பெற்றோர் ராம்கி

பவுர்ணமிகிட்ட எப்படி விஷயத்தை சொல்றதுன்னு ராம்கி தவிக்க, அவனின் அப்பா அம்மா பவுர்ணமிகிட்ட விஷயத்தை போட்டு உடைச்சுடறாங்க. ராம்கிக்கும், தனது தங்கச்சி பவானிக்கும்தான் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்ட பவுர்ணமி... ராம்கிக்கு லெட்டர் எழுதி வச்சுட்டு கிளம்பிடறா. சித்தியை அடையணும்னு துடிச்சு ரவுடி சோனு, இப்போ பவுர்ணமியை அடைய துடிச்சு, அவளை கடத்திகிட்டு போயிடறான்.பாவம் பவுர்ணமி பிறந்ததில் இருந்தே அதிர்ஷ்டம் கெட்டவன்னு சொன்னது எப்படி எல்லாம் உண்மையாகுது பாருங்க...

ஒரு சின்ன பொண்ணு எவ்ளோதான் தாங்குவா.?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X