Just In
- 14 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 41 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிகம் சம்பளம்: எத்தனை கோடி தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தொலைக்காட்சி நடிகை ஸ்ரீமுகிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி ரொம்ப மோசம் என்று முன்பு விமர்சித்த நாகர்ஜுனா தற்போது அதை தொகுத்து வழங்குவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டியை படுக்கைக்கு அழைத்த விவகாரம் பூதாகரமாகிவிட்டது.
"ரூ.100 பத்திரத்தில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார்.." கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்

ஸ்ரீமுகி
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக ஒரு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி புகார் கூறியுள்ளார். அதே சமயம் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்ரீமுகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த சீசன் போட்டியாளர்களில் ஸ்ரீமுகிக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.

பிரபலம்
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தாலும் ஸ்ரீமுகி ஆந்திரா, தெலுங்கானாவில் மிகவும் பிரபலம். அவரின் அழகான முகம் பலருக்கும் பிடித்துள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு ரூ. 3.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.

போட்டியாளர்
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவர் ஸ்ரீமுகி தான். இருப்பினும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். சக போட்டியாளர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. கடந்த வாரம் தப்பித்துவிட்டார், இந்த வாரமும் தப்பிப்பாரா என்பதை வார இறுதி நாட்களில் பார்க்க வேண்டும்.

நாகர்ஜுனா
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வரும் புகார்களை நாகர்ஜுனா கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எது நடந்தாலும் சரி, எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் நாகர்ஜுனா என்று விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசிவிட்டு தற்போது பணத்திற்காக தொகுத்து வழங்குகிறார் என்று குற்றச்சாட்டும் உள்ளது.