Tamil selvi serial:கொம்பனால் தமிழ்செல்வி குடும்பத்துக்கே ஆபத்தா?
சென்னை: சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான்னு ரெண்டு வாரமா பயமுறுத்திகிட்டு இருக்காங்க. என்னதான் கிராமமா இருந்தாலும் ஒரு கொலைகாரன் தப்பித்தால் போலீஸ் உடனே அரெஸ்ட் பண்ண மாட்டாங்களா?
தினமும் கிராமத்துக்கு வந்து மிரட்டறான், தமிழ்செல்வியின் சரவணன் மாமாவை விஷ கத்தியால் குத்திட்டு போறான்.போலீஸ் என்ன வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா?
அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ தமிழ்செல்வி தங்கச்சி சின்ன பொண்ணு. அவளையும் பள்ளியிலிருந்து வரும்போது மிரட்டி கிணற்றில் விழ வச்சுட்டான். பயமுறுத்தவே சீரியல் எடுப்பீங்களா?

முக்கியம் பெண்கல்வி
தமிழ்செல்வி சீரியலில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள். கிராமத்தில் அருகில் இருக்கும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துவிட்டு,அடுத்து படிக்க டவுனுக்கு செல்ல வேண்டும் என்றால் எந்த பெற்றோரும் அனுப்பி வைப்பதில்லை. வீட்டில் வச்சிருந்து அவள் மூளையை மழுங்கடித்து, எவனாவது ஒருத்தனை மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் செய்து வைத்துவிடும் வழக்கம் இன்னும் பல கிராமங்களில் இருக்கிறது.

பாட்டி தமிழ்செல்வி
வீட்டோட கொஞ்ச நாள் வச்சிருந்து மாப்பிள்ளைபார்த்து கட்டிக் குடுத்துடு... பொம்பளைப் பிள்ளையைப் படிக்க வச்சு, அவ எப்போ வருவான்னு காத்துக்கிட்டு இருந்து வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியாதுன்னு, வீட்டில் இருக்கும் பாட்டித்தான் சொல்லிக் குடுப்பாங்க.ஆனா, தமிழ்செல்வி பாட்டியை வித்தியாசமா காமிச்சு இருக்காங்க.பெண் கல்வி அவசியத்தை பாட்டி மூலமா சிம்பிளா உணர்த்தி இருக்காங்க.

தமிழ்செல்வி செமினாரில்
கல்லூரியில் ஆங்கிலம் பேச முடியாமல் தவித்த தமிழ்செல்வி அவமானத்தை ஊக்கப் படிக்கட்டுக்களாக எடுத்துக் கொண்டு சாதிப்பது ரொம்பவே நல்லாருக்கு. ஒரு மாணவியைப் பார்த்து நீ செமினாருக்கு வராதேன்னு சொல்ல எந்த பேராசிரியருக்கு உரிமை இருக்குதுன்னு தெரியலை. சரி அப்படியே ஆங்கிலம் தெரியாது என்றாலும், நமது தாய் மொழி தமிழில் எதாவது செமினார் தயார் செய்து பேச வைக்க ஆசிரியருக்கு என்ன தயக்கம்.

தமிழ்செல்வி பெருமை
ஆசிரியர் செமினாரில் கலக்கிய தமிழ்செல்வியிடம் வருத்தம் தெரிவிக்கும்போது, தமிழ்செல்வி ஆசிரியரின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறுவது மிக அருமை. இப்படிப்பட்ட கதைகொண்ட சீரியல்கள் நிஜமா கிராமத்து மாணவிகளுக்கு தேவையாக இருக்கிறது. இப்போது கிராமத்து பிள்ளைகள நிறைய படிக்க ஆசைப்படுகிறார்கள்..ஆனால், அவர்களை ஊக்குவிக்கத்தான் ஆள் இல்லை. இந்த நேரத்தில் இது போன்ற சீரியல்கள் அவசியம்.


Click it and Unblock the Notifications











