இனி இவரா சித்தி...ராதிகாவிற்கு பதில் சித்தி 2 சீரியலில் நடிக்க போகும் நடிகை

சென்னை : ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் டிவி சீரியல்கள் பல சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. சித்தி, வாணி ராணி, அண்ணாமலை உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களிடையே பிரபலம்.

இவற்றில் தைரியமான பெண்ணாக ராதிகா நடிப்பதால், பெண்கள் தான் டிவி சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, தற்போது ஆண்களும் சீரியல் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ராதிகாவின் சீரியல்கள் பிரபலமாக பேசப்பட்டன.

Is this actress to act in Chithi 2 serial as chithi ?

தற்போது ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ராதிகா அறிவித்தார். மேலும் தான் இனி எந்த டிவி தொடர்களிலும் நடிக்க போவதில்லை என கூறி இருந்தார்.

மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாலும், தனது கணவர் சரத்குமாருக்கு துணையாக தீவிர அரசியலில் இறங்க இருப்பதாலும் தான் ராதிகா சித்தி 2 சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் சித்தி 2 சீரியல் நிறுத்தப்பட உள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் இது உண்மையில்லை என மறுத்த ராதிகா, தொடர்ந்து சித்தி 2 ஒளிபரப்பாகும் என்றார்.

தற்போது லேட்டஸ்ட் தகவலாக, சித்தி 2 சீரியலில் இனி ராதிகாவிற்கு பதில் மூத்த முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து, டிவி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயாணி ஆகிய இவர்களில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் சித்தி கேரக்டரில் ராதிகாவிற்கு பதில் வேறு யாரையும் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமியை நடிக்க வைக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X