நடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் ஜமீன் குடும்பத்து ஈஸ்வரி அம்மா பையன் சண்முகத்துக்கும், முருக பக்தை தெய்வானைக்கும் கல்யாணம் நடக்க இருக்கு.
சண்முகத்தின் உள்ளே அருந்ததியின் தீய சக்தி புகுந்துருது. எப்படியும் வெளியில் வந்துட கூடாது... இந்த குடும்பத்தில் இருந்து... இந்த வீட்டு ஆண்களை பழி வாங்கணும்னு துடிக்குது.
நம்பூதிரி ரஞ்சனி அம்மாவையும், தன் சக்தியை பயன்படுத்தி, தனக்கு சாதகமா அவங்க செயல்படற மாதிரி செய்துக்கறான்.

எப்படி கல்யாணம்
நலுங்கு முடிஞ்சு வேஷ்டி சட்டை போட ரூமுக்கு வந்த சண்முகம். கோவத்தில் ரஞ்சனி ரஞ்சனின்னு கத்தறான். ரஞ்சனி அம்மா வந்து நிற்க... நீ பாட்டுக்கு சும்மா இருக்க... இந்த சடங்கையே என்னால் தாங்கிக்க முடியலை. கல்யாணம் எப்படின்னு கேட்கறான்.

செய்து வச்சு
உனக்காக எல்லாம் செட் செய்து வச்சுட்டேன்..நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே... இப்போ உனக்கு தடையா இருப்பது தெய்வானை கழுத்திலிருக்கும் முருகன் டாலர் போட்ட செயின்தான்.அதை அவள் எப்படியாவது கழட்ட நீதான் வேலை பார்க்கணும்னு சொல்றாங்க ரஞ்சனி அம்மா.

லாக்கெட் வச்சு
இதோ...இந்த லாக்கெட்டுல பாருங்க... என்னோட போட்டோவும், தெய்வானை போட்டோவும் போட்ட லாக்கெட் செயினை வச்சு இருக்கேன். இதை தெய்வானையை போட்டுக்க சொல்லி, அந்த டாலரை கழட்ட வச்சாத்தான் கல்யாணம் சமயத்துல நான் அவள் கழுத்துல தாலி கட்ட முடியும்னு சொல்றான்.

சண்முகமும் சிரிக்கிறான்
ரஞ்சனி அம்மா நல்ல பிளான்னு சொல்லி சிரிக்க, சண்முகமும் சிரிக்கறான்.இப்போ நடக்க போற கல்யாணம் தெய்வானைக்கும் , தீய சக்திக்கும் நடக்கப் போகும் கல்யாணம்னு சொல்லி சிரிக்கறான்.

முருகன் டாலர்
இங்கே தெய்வானை முருகன் டாலரை கழட்டிட்டு, சண்முகம் குடுத்த செயினை போட்டுக்கிட்டாலும், மனசு கேட்காம மறுடியும் முருகன் டாலர் செயினை போட்டுக்கறா. இது சண்முகத்துக்கு தெரியாது.


Click it and Unblock the Notifications











