Don't Miss!
- News
வருமான வரித்துறையிடம் எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கிறது.. ஐடி நோட்டீஸ் குறித்து சரத்பவார் கிண்டல்
- Finance
தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்
- Automobiles
இந்தியா தயாரித்த விகாஸ் இன்ஜினுக்கு இவ்ளோ சக்தி இருக்கா? ராக்கெட்ரி படத்தில் சொல்லப்படாத ரகசியம்!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
குக் வித் கோமாளியில் 'கண்ணம்மா' ரோஷினி...அப்போ அந்த தகவல் உண்மை தானா ?
சென்னை : விஜய் டிவியில் மிக பிரபலமான, டாப் ரேட்டிங் சீரியல்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இதற்கு காரணம் இந்த சீரியலில் டைட்டில் ரோலாக கண்ணாம்மா ரோலில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் தான் என்பது அனைவரும் அறிந்தது. இந்த சீரியலில் நடித்ததால் கண்ணம்மாவான ரோஷினிக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்த சீரியலின் மொத்த கதையும் கண்ணம்மாவை சுற்றி தான் சென்று கொண்டிருந்தது. கண்ணம்மாவை போல், கண்ணம்மா - பாரதி இடையேயான ஜோடி பொருத்தமும் இந்த சீரியலுக்கு கூடுதல் ஹைலைட்டாக அமைந்தது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலை கண்ணம்மா கேரக்டருக்காகவே பார்த்தவர்கள் அதிகம்.
அடப்பாவமே… அந்த நடிகைக்கும் கொரோனா… வீட்டில் தனிமையில் ஓய்வு !

பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகல்
பலரின் ஃபைவரைட்டாக இந்த சீரியலில் இருந்து விலக போவதாக ரோஷினி ஹரிபிரியன் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மனமுடைந்தனர். அவர் தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீரியலின் டிஆர்பி பாதிக்கப்படும் என்றெல்லாம் பலர் கூறினர். இருந்தாலும் தனக்கு சினிமா சான்ஸ் அதிகம் வருவதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி கூறினார்.

இந்த வாய்ப்புக்களை இழந்தாரா
சூர்யா நடித்த ஜெய்பீம், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, டைரக்டர் மோகன்ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் முக்கிய ரோல்களில் நடிக்க ரோஷினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலால் அந்த வாய்ப்புக்களை ரோஷினி இழந்ததாக கூறப்பட்டது. அதனால் தனது எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டது.

ரோஷினியை மிஸ் பண்ணும் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய பிறகு போட்டோஷுட்கள் பலவற்றை நடத்தி வந்ததால், ரோஷினி சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் என கூறப்பட்டது. இதற்கிடையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் விதுஷாவை நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் அவரை ஏற்காத ரசிகர்கள், பிறகு அவரை கண்ணம்மாவாக ஏற்க துவங்கினர். இருந்தாலும் ரோஷினி மாற்றப்பட்ட பிறகு பாரதி கண்ணம்மா சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், இந்த சீரியலின் டிஆர்பி சரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

குக் வித் கோமாளியில் ரோஷினி
இந்நிலையில் விரைவில் துவங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரோஷினி பங்கேற்பதாக ப்ரோமோ காட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் சினிமாவில் நடிக்க போவதாக சொன்னார்களே. இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வந்துள்ளாரே. அப்படியானால் சினிமா சான்ஸ் கிடைத்து போனதாக சொன்னது பொய்யா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை என்றால் எதற்காக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் என்றும் கேட்டு வருகின்றனர்.

அப்போ அது உண்மை தானா?
உண்மையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கு சினிமா சான்ஸ் காரணமில்லை. பாரதி கண்ணம்மாவில் கதையில் மாற்றம் கொண்டு வருவதற்காக சில நெருக்கமான சீன்கள் வைக்க திட்டமிடப்பட்டதாம். இதில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் ரோஷினி அந்த சீரியலில் இருந்து விலகியதாக அந்த சமயத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது ரோஷினி, குக் வித் கோமாளிக்கு வந்துள்ளதால் அந்த தகவல் உண்மை தானோ என பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.