இதற்கு தான் பிக் பாஸ் காயத்ரியை அழைத்து வந்திருக்கிறாரா?
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு காயத்ரி எதற்கு வந்திருக்கிறார் என்பது நேற்று இரவு தான் தெரிய வந்தது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ளவர்களில் ஐஸ்வர்யா போன்று நல்லவர் உண்டோ என்பது போன்று நேற்று வீடியோக்கள் போட்டுக் காட்டியுள்ளார்கள். ஐஸ்வர்யா சென்றாயனிடம் சொன்ன பொய்யை அப்படியே மறைத்துவிட்டார்கள்.
ரித்விகா, ஜனனி சொன்னதை மட்டும் போட்டுக் காட்டி ஐஸ்வர்யா நல்லவர் என்று தெரிவித்துள்ளனர்.

தாடி பாலாஜி
முதல் சீசனில் போட்டியாளர்கள் ஆர்த்தி மீது குப்பையை கொட்டிய வீடியோவை போட்டுக் காட்டிவிட்டு இந்த சீசனில் ஐஸ்வர்யா தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டிய வீடியோவை காட்டினார்கள். போட்டி என்று வந்தால் எதுவும் தப்பே இல்லை. அதனால் ஐஸ்வர்யா குப்பையை கொட்டியது தவறு இல்லை என்கிறார் பிக் பாஸ்.

ஜனனி
ஐஸ்வர்யா அழும்போது ஏன் அவரை நீங்கள் யாரும் சமாதானம் செய்யவில்லை என்று காயத்ரி ஜனனியிடம் கேட்டார். ஐஸ்வர்யா ஒன்று கோபப்பட்டு பேயாட்டம் ஆடுவார், இல்லை என்றார் அழுவார். இதை பார்த்து பார்த்து பார்வையாளர்களை போன்றே போட்டியாளர்களுக்கும் பழகிவிட்டது காயத்ரி. போயும் போயும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பேசத் தான் விருந்தினராக வந்தீர்களா?

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா அடிக்கடி கோபப்படுவா, அடுத்த நிமிடம் அழுவா, பின்னர் அவளே சமாதானம் ஆகிவிடுவாள். அவள் அழுதால் யாஷிகா தான் சமாதானம் செய்வார். கமல் சார் திட்டியதும் ஐஸ்வர்யா அழுதபோது யாஷிகா ஆறுதல் சொன்னதால் நாங்கள் விட்டுவிட்டோம். அவ்வளவு பெரிய மனிதர் திட்டினால் யாராக இருந்தாலும் அழுகை வரும். அதனால் தான் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யவில்லை என்றார் ஜனனி.

பார்வையாளர்கள்
ஐஸ்வர்யா அழுததை பார்த்து பார்வையாளர்கள் யாருக்கும் அவர் மீது பரிதாபம் ஏற்படவில்லை. இது தெரிந்தும் காயத்ரி ஐஸ்வர்யாவை ஏன் சமாதானம் செய்யவில்லை என்று கேட்கிறார். ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யாததால் ஜனனி, தாடி பாலாஜி, விஜயலட்சுமியை யாரும் தவறாக நினைக்கவில்லை. மாறாக கமலிடம் திட்டு வாங்கி ஐஸ்வர்யா அழுததை பார்த்து உனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று திட்டியவர்களே அதிகம்.

மக்கள்
ஐஸ்வர்யா அழுதபோது அவர் அருகில் இருந்த சென்றாயன் கூட அழாதே என்று சொல்லாததை பெரிய விஷயமாக பேசுகிறார் காயத்ரி. அந்த மனுஷன் பாவம் ஏமாந்து போய் வெளியே சென்றார். ஐஸ்வர்யாவுக்கு யாரும் ஆறுதல் கூறாதது அவரை கார்னர் செய்தது போன்று மக்கள் உணர்ந்தாக தெரிவித்துள்ளார் காயத்ரி. மக்கள் யாரும் அப்படி எல்லாம் நினைக்கவில்லை காயத்ரி. நீங்கள் பேசுவதை பார்த்தால் போட்டியாளர்களை குழப்பிவிட பிக் பாஸ் உங்களுக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கிறார் போன்று.


Click it and Unblock the Notifications











