Kanmani Serial: வளர்மதி மோடில் இருந்து ஹரிப்ரியா மோடுக்கு மாற.. ஐயோடா!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் வளர்மதியா நடிக்கும் ஹரிப்ரியா இதற்கு முன்னனதாக பிரியமானவள் சீரியலில் இசைப்ரியாவாக சீரியல் ஆர்வலர்களுக்கு பரிச்சயம் ஆனவர். இவர் பெயரே இந்த சீரியலுக்குப் பிறகு இசை என்றுதான் ஆனது.

கண்மணி சீரியலில் ரசிகர்கள் அனைவர் கோபத்தையும் சம்பாதிச்சு இருக்கார். அதனால்தானோ என்னவோ என்ன இசை இப்படி பண்றீங்க. சுத்தமா நல்லா இல்லேன்னு வளர்மதி கேரக்டர் பார்த்துட்டு கமெண்ட் செய்கிறார்கள். அந்த அளவுக்கு வளர்மதியா மக்கள் மனதில் நின்று இருக்கார் ஹரிப்ரியா.

ஷூட்டிங் இல்லாத சமயத்தில் கிளாசிக்கல் நடனம், ஷாப்பிங், சினிமா பார்ப்பது, குடும்பத்துடன் வெளியில் செல்வது என்று பொழுதைக் கழிப்பதாக சொல்கிறார்.

இசை ரொமான்ஸ்

இசை ரொமான்ஸ்

இசைப்ரியாவாக ரொமான்ஸ் செய்தது எப்படி இருந்தது என்று கேட்டபோது... அதில் ரொமான்ஸ் மட்டும் ஏன் பார்க்கறீங்க? கம்யூனிசம் பேசுவேன்.. அது நல்லாத்தானே இருக்கும். முதன் முறையாக சீரியலில் அழாமல் நடிச்ச கேரக்டர் நானாகத்தான் இருப்பேன். அந்த அளவுக்கு இயக்குநர் ஆரம்பத்திலேயே இந்த பொண்ணு எதுக்கும் அழாது அப்படித்தான் இந்த கேரக்டர் என்று சொல்லித்தான் என்னை நடிக்க வச்சார்.

நெகட்டிவ் கேரக்டர்

நெகட்டிவ் கேரக்டர்

இசைப்ரியா கேரக்டருக்குப் பிறகு நல்லதாக கேரக்டர் அமையணும்னு இத்தனை நாள் காத்திருந்ததது வீண் போகாமல் வளர்மதி கேரக்டர் அமைஞ்சு இருக்கு. தைரியமா எடுத்து பண்ணலாம்னு வளர்மதி கேரக்டருக்கு ஓகே சொன்னேன். நான் நினைச்சபடி கேரக்டர் நல்லா ரீச் ஆகி இருக்கு. இருந்தாலும், வளர்மதி மோடில் இருந்து ஹரிப்ரியா மோடுக்கு மாறுவதற்கு ரொம்ப நேரம் எடுக்கும்.

வீட்டில் ரிலாக்ஸ்

வீட்டில் ரிலாக்ஸ்

வீட்டில் போயி என்னை நானே ரிலாக்ஸ் செய்துக்கொண்டு வளர்மதி கேரக்டரில் இருந்து ஹரிப்ரியாவா மாறுவேன். சீரியல்களில் நெகட்டிவ் ரோல் எனும்போது கொஞ்சம் கஷ்டம்தான். நாள் முழுக்க அதே மோட்...இன்னும் இதில் கிரியேட்டிவிட்டி என்று என் மண்டைக்குள் எதையாவது திணித்துக் கொண்டு, நெகட்டிவ் ரோலுக்குத் தீனி போட்டுக்கொண்டே இருக்கணும்.

வெளியில் சுலபமா

வெளியில் சுலபமா

அதனால், சுலபமா வளர்மதி கேரக்டரில் இருந்து வெளியில் வர முடியாது. ரொம்ப கஷ்டம். ஒரு சில நேரத்தில் வளர்மதியா ஷூட்டிங் சமயத்தில் பொறுமையை கூட இழந்து இருக்கேன். அப்புறம் என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நீ வளர்மதி இல்லை.. ஹரிப்ரியான்னு எனக்கு நானே சொல்லிக்குவேன் என்றும் கூறுகிறார் ஹரிப்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X