சரமாரியாக விளாசும் ஐஸ்வர்யா.. விழிபிதுங்கி நிற்கும் வைஷ்ணவி.. களைகட்டும் பிக்பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவியை ஐஸ்வர்யா சரமாரியாக ஏறும் புரமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவியை ஐஸ்வர்யா சரமாரியாக ஏறும் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வைஷ்ணவி புறம்பேசுவார், போட்டுக்கொடுப்பார் என்றே மக்கள் மனதில் பதிந்துள்ளது.
வைஷ்ணவியின் நடவடிக்கை அப்படியே ஜூலியை போன்று இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

முகத்திரையை கிழித்துவிடுவேன்
கடந்த வாரம் நிகழ்ச்சியின் போது 5 நிமிடம் கொடுத்தால் போதும் அனைவரின் முகத்திரையையும் கிழித்துவிடுவேன் என கண்ணீர்மல்க பேசினார் வைஷ்ணவி.

முகத்திரையை கிழியுங்கள்
இதனைக்கேட்ட கமல் வைஷ்ணவிக்கு 5 நிமிடம் கொடுத்து அவரது முகத்திரையை கிழியுங்கள் என எவ்வளவோ கேட்டும் முகத்திரையை கிழிக்க மறுத்துவிட்டார் வைஷ்ணவி.

ஏதோ ஏடாகூடம்
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் புரமோ வெளியாகியுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் வைஷ்ணவி ஏதோ ஏடாகூடமாக செய்துவிட்டதாக தெரிகிறது.

கத்தும் ஐஸ்வர்யா
அதற்காக ஐஸ்வர்யா அவரை பிடித்து ஏறு ஏறு என ஏறுகிறார். கத்திபேசும் ஐஸ்வர்யாவை கத்தாதே என்கிறார் வைஷ்ணவி.

மகத்தை காப்பாற்ற
அதற்கு நான் கத்துவேன் தான் கத்துவேன்னா கத்துவேன் என வைஷ்ணவியை தாளித்து விடுகிறார். பின்னர் மகத்தை காப்பாற்றவே யாஷிகா கையை கட்டினேன் என்கிறார் வைஷ்ணவி.

எதற்காக சண்டை?
அப்போதும் விடாமல் வைஷ்ணவியை விளாசி தள்ளுகிறார். இந்த சண்டை எதற்காக வந்தது? வைஷ்ணவி என்ன செய்தார்? என்பது இன்றிரவு தெரியவரும்.


Click it and Unblock the Notifications











