Rachitha - என்னது ரச்சிதாவுக்கு இரண்டாவது திருமணமா?.. மாப்பிள்ளை யார் தெரியுமா?.. அப்போ தினேஷின் நிலைமை

சென்னை: சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆனவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த சீசனில் டைட்டில் வின்னராக மாற முடியவில்லை. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷை பிரிந்தார். தற்போது அவருக்கு இரண்டாம் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழகக்ம். அதனை பயன்படுத்தி பலர் வளந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

It has been reported that Rachitha is about to get married for the second time

தமிழில் ரச்சிதா: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

படங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதில் அவரது லுக்கூட சமீபத்தில் வெளியானது. மேக்கப் எதுவும் இல்லாமல் இருந்த அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் அட ரச்சிதாவா இது என்று ஆச்சரியமடைந்தார்கள்.

தூது விட்ட தினேஷ்: சூழல் இப்படி இருக்க தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். அப்போது சில சமயங்களில் ரச்சிதாவை பற்றி மறைமுகமாக பேசினார். அதன் மூலம் அவருக்கு ரச்சிதாவுடன் வாழ்வதற்கான விருப்பம் இன்னமும் இருப்பதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். ஆனால் ரச்சிதாவோ தினேஷ் பேசியதற்கு எந்த ரியாக்‌ஷனும் பெரிதாக செய்யவில்லை.

இரண்டாவது திருமணம்: இந்நிலையில் ரச்சிதாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாகவும் கன்னட சினிமா உலகத்தை சேர்ந்த இயக்குநர் ஒருவரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் புதிய தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த தினேஷ் ரச்சிதா குறித்து பேசுகையில், "ஒரு சுவரினை எழுப்பிக்கொண்டு அதற்குள் ரச்சிதா வாழ்ந்துகொண்டிருக்கிறார். என்னால் உடைக்க முடியாத அளவுக்கு அது வலுவாகிக்கொண்டே போகிறது. இதற்கு மேல் நான் அடுத்த வாழ்க்கையை நோக்கிய பயணத்தை தொடங்கப்போகிறேன்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X