ரோஜாவுக்கு ஆறுதல் சொல்றது நல்லாருக்கு....!
சென்னை: :சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் பாதிக்கப்பட்ட ரோஜாவுக்கு ஸ்வேதா, அனுசுயா ரெண்டு பேரும ரோஜாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை மோட்டிவ் பண்றது ரொம்ப நல்லாருக்கு
ரோஜா ராஜாவை கல்யாணம் செய்துக்க எந்த லெவலுக்கும் போவான்னு காமிச்சு,இப்போ அவளுடனே அவளுக்கு உதவியா இருந்த செல்வமே நாலு பேரா சேர்ந்து ரோஜாவை பாலியல் வன் கொடுமை செய்துடறாங்க.
துவண்டு போய் கிடக்கும், ரோஜாவுக்கு காவல் கூட போடாமல் காவல் துறை இருந்த நிலையில்தான், போராட்டம் நடத்தி அவளுக்கு போலீஸ் காவல் போட வச்சாங்க.

உயிரே கூட
ரோஜாவுக்கு போலீஸ் காவல் போடாமல் இருந்திருந்தாலே போதும் அவளை மயக்கத்தில் வச்சு, சூர்யாவை கல்யாணம் செய்துக்கலாம்னு திட்டம் போட்டு இருந்த ராஜா ஆள் வைத்து ரோஜாவை கொலையே செய்திருப்பான்.

உடல் நலமான ரோஜா
கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் நிலைமைக்கு திரும்பி வரும் ரோஜா,கண் விழிச்சதும் அனுசுயா, சுவேதாவைப் பார்த்து கூனிக் குறுகி முகத்தை திருப்பிக்கொண்டு அழறா.

எதுக்கு அழணும்
நீ எதுக்கு அழணும் ரோஜா...நடந்தது ஒரு விபத்து. விபத்துல ஏதாவது ஆனா, நாம் சிகிச்சை பார்த்துக்கிட்டு, உடல் நல்லான உடனே நார்மல் நிலைமைக்கு திரும்பிடறது இல்லையா...அது போல இதையும் நினைச்சுக்கோ ரோஜா. இன்னிக்குத்தான் புதுசா பிறந்தோம்னு நினைச்சுக்கோன்னு அறிவுரை சொல்றாங்க.

இப்படி பாதிப்பு
இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எல்லா விதத்திலும் ஆறுதல், வழிகாட்டுதல் சொல்ற மாதிரி ரோஜாவின் வாழ்க்கையை இயக்குநர் அமைத்து பார்வையாளர்களை கவர்ந்ததால் ரொம்ப நல்லா இருக்கும்.


Click it and Unblock the Notifications











