பாலாஜியை தம்பி, தம்பின்னு கூப்பிட்டு கடுப்பேற்றும் நித்யா
Recommended Video

சென்னை: கணவர் பாலாஜியை தம்பி, தம்பி என்று அழைத்து அவரை கடுப்பேற்றுகிறார் நித்யா.
பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் பணிப்பெண்களாகவும் இருந்த டாஸ்க் இரண்டு நாட்களாக தொடர்ந்தது. அந்த டாஸ்க்கை பார்த்து மகத் மீது தான் பார்வையாளர்களுக்கு கோபம் ஏற்பட்டது.
இந்நிலையில் பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களை வேலை வாங்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலாஜி
பாலாஜி தம்பி இங்க வந்து கண்ணாடியை கொஞ்சம் புடிங்க என்று நித்யா வேலை வாங்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. தம்பி வேலை வேணும் என்று கேட்டார் சரி வாழ்க்கை கொடுக்கலாமேன்னு கொடுத்தேன் என்கிறார் நித்யா.

மனைவி
பாலாஜி ஏற்கனவே நித்யாவை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் நித்யா அவரை அடிக்கடி தம்பி தம்பி என்று அழைத்து கடுப்பேற்றுகிறார்.
அழுகை
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தன்னையே டார்கெட் செய்வதாகக் கூறி அழுகிறார் நித்யா. அவருக்கு மும்தாஜ் ஆறுதல் கூறும் ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

கோரிக்கை
ப்ரொமோ வீடியோக்கள் எல்லாம் பரபரப்பாக நன்றாக உள்ளன. ஆனால் நிகழ்ச்சி மட்டும் தான் சொதப்புகிறது. கொஞ்சம் நிகழ்ச்சியையும் பரபரப்பாக்கினால் நன்றாக இருக்கும் என்பது பார்வையாளர்களின் கோரிக்கை.


Click it and Unblock the Notifications











