நாமினேட் செய்யப்படும் ஐஸ்: ஆனால் பிக் பாஸ் ஆட்டையை கலைக்காமல் இருக்கணுமே
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் வேலை துவங்கிவிட்டது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து நேற்று டேனி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் வேலை துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலனவர்கள் ஐஸ்வர்யா, யாஷிகா மீது செம கடுப்பில் உள்ளனர்.
அதிலும் ஜனனி, ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யாவை வெளியேற்றிவிட்டு தான் மறுவேலை பார்க்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளனர்.

ஐஸ்வர்யா
நேற்று டேனி கிளம்பியபோது அடுத்த வாரம் உன்னை சந்திக்கிறேன் என்று ஐஸ்வர்யா அவரிடம் கூறினார். அதற்கு டேனி, சரி வா பார்க்கலாம் என்றார். ஐஸ்வர்யா பேசியதை கேட்ட பார்வையாளர்கள் நீ வெளியே வாம்மா அப்புறம் இருக்கு வேடிக்கை என்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் ஐஸ்வர்யாவை அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்புவாரா என்ன?
ரித்விகா
நாமினேஷன் குறித்து வெளியான வீடியோவில் ரித்விகா, ஜனனி, தாடி பாலாஜி ஆகியோர் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா பற்றி ரித்விகா கூறியது சிறப்பு. ரித்விகா தன்னை கிண்டல் செய்ததை பார்த்த ஐஸ்வர்யா பாவம் போன்று முகத்தை வைத்திருந்தார். இதற்கிடையே இந்த மும்தாஜ் வேறு ஐஸ்வர்யா முதுகில் கையை வைத்து ஆறுதல் கூறுகிறாராம்.

பிக் பாஸ்
ப்ரொமோ வீடியோவில் மும்தாஜ் கூட ஐஸ்வர்யாவின் புகைப்படத்தில் சிவப்பு ஸ்பிரே அடிப்பது போன்று காண்பித்துள்ளனர். ஆனால் ப்ரொமோவை வைத்து அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. நம்ம பிக் பாஸ் தான் ப்ரொமோவில் ஒன்றும், நிகழ்ச்சியில் வேறொன்றுமாக காட்டுவதற்கு பெயர் போனவர் ஆச்சே. அதனால் இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை தெரிய வரும்.

வெளியேற்றம்
ஐஸ்வர்யாவை பிக் பாஸ் இந்த வாரம் நிச்சயம் வெளியேற்ற மாட்டார். அவருக்கு பிடித்த ஐஸ்வர்யாவை அதற்குள் அவர் வெளியே அனுப்பி வைக்க மாட்டார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அதே சமயம் ஐஸ்வர்யா நாமினேஷனுக்கு வந்தால் அவரை வெளியேற்ற காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள். ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்படுவாரா, அப்படியே நாமினேட் செய்யப்பட்டாலும் பிக் பாஸ் ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்து அவரை காப்பாற்றாமல் இருப்பாரா? பதில் சொல்வது ரொம்பக் கஷ்டம் பாஸ்.


Click it and Unblock the Notifications











