விஜய் டிவியை கைப்பற்றிய பிரபல நிறுவனம்?.. வெளியேறும் தொகுப்பாளர்கள்?.. அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழ் மக்கள் கண்டு ரசிக்கும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி. இதில், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பலவிதமான ரசனை மிகுந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் இருந்து திரையில் ஜொலித்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு என்று தனி அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான 5 நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக கலக்கப்போவது யாரு, அது இது எது, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் ஹிட் நிகழ்ச்சிகளாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இன்றும் தமிழ் மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், காபி வித் டிடி, குக் வித் கோமாளி புகழ், குக் வித் கோமாளி சிவாங்கி, விஜே மணிமேகலை என பலரும் பிரபலம் அடைந்திருக்கிறார்கள் இவர்களது அடையாளமாக விஜய் தொலைக்காட்சி இருக்கிறது. இந்நிலையில், இதில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி அதிரடியாக நீக்க முடிவெடுத்திருக்கிறதாம். இதில் பிரபலமான தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி என கூறப்படுகிறது.

சூப்பர் சிங்கர்: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த், விஜே பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதில் இசையமைப்பாளர் இமான், பாடகி சித்ரா, பாடகர் மனோ ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். இந்திய அளவில் ஹிட் நிகழ்ச்சியாக இருக்கும் சூப்பர் சிங்கர் 10 சீரிஸாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஜூனியர், சீனியர் இரண்டு வகைகளில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு விரைவில் மூடு விழா நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. அரைத்த மாவையே அரைத்து வருவதால் மக்களின் வரவேற்பை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்நிகழ்ச்சியை விரைவில் நிறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலாக புதிய நிகழ்ச்சி மற்றும் பிரம்மாண்ட மேடையில் புதிய தொகுப்பாளர்கள் வேறு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், பிரியங்கா பெயர் இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.
நீயா நானா: எழுத்தாளர், பேச்சாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் கோபிநாத். இவர் தொகுத்து வழங்கிய நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏராளமான மக்கள் இருக்கின்றனர். நீயா நானாவில் நடத்தப்படும் விவாதங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பலரது கோர முகங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கோபிநாத்திற்கு அடையாளம் கொடுத்த நிகழ்ச்சி நீயா நானா. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு சூழ்நிலைகளையும் கடந்து வந்த மனிதர்களின் நிஜத்தை பிரதிபலித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் முதல் தனியார் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நெருக்கடியான நிலையை உணர்த்தியுள்ளது. தமிழ் சமூகத்தில் நிலவும் சாதிய படி நிலைகளையும், மதம் குறித்த பாகுபாட்டை விளக்கி வைக்கும் வகையிலான புதிய கருத்துக்களை உருவாக்கியது நீயா நானா. எளியவர்களின் பக்கம் நின்று நீதி பேசும் கதைகளாக இன்று வரை தொடர்கிறது. மக்கள் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியை விரைவில் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கும் மட்டும் அல்ல அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்திற்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. அண்மையில் நீயா நானா நிகழ்ச்சியில் 3 மொழிக்கொள்கைக்கு எதிரான விவாதங்களை நடத்தியதால் இந்த முடிவும் என்றும் கூறப்படுகிறது. கோபிநாத்தை விஜய் தொலைக்காட்சியில் இருந்து நீக்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கைமாறும் விஜய் தொலைக்காட்சி?: மக்களின் செல்வாக்கை பெற்ற விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாண்டின் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருகின்றன. இந்நிலையில், நீயா நானா, சூப்பர் சிங்கர் போன்ற பிற நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சியில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியறிந்து விஜய் தொலைக்காட்சியை காணும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில், பிரபலமான தொகுப்பாளர்களும் நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதைவிட ஹைலட்டான ஒரு தகவல் வெளியாகியுள்ளது கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சி கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டாராக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூற்பபடுகிறது. கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியின் லோகோவும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கலர்ஸ் அதிரடி முடிவு: நல்ல லாபத்திற்கு விஜய் தொலைக்காட்சி விற்கப்பட்டிருப்பதாக கூறும் நிலையில், கலர்ஸ் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறதாம். இதில், இதுவரை நடந்து வந்த பழமையான நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதுப்பொலிவுடன் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை தொடங்க இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக பிரியங்கா, கோபிநாத் போன்ற தொகுப்பாளர்களும் நீக்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். கலர்ஸ் நிறுவனம் அதிரடியான மாற்றத்தால் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனராம். சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் பெயர் சொல்லும்படியான நிகழ்ச்சி எதுவும் ஹிட் ஆகவில்லை. அரைத்த மாவை திரும்ப அரைப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள்: விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கரியரை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். ரஜினி, கமல், விஜய் அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றே பெயர் எடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை பாேன்றே ரோபோ சங்கர், புகழ், திவ்யதர்ஷினி போன்ற பலரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தங்களது திறமையால் வளர்ந்து தமிழ் சினிமாவில் முத்திரை பத்தித்துள்ளனர். இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி கலர்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து சோகமடைந்துள்ளனர். பலரின் முகங்களுக்கு அடையாளம் கொடுத்த மேடை மாறிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி சேனலை இயங்குவதற்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது. பல சேனல்கள், குறிப்பாக சிறிய சேனல்கள், நிதி நெருக்கடியால் மூடப்படலாம். ஒரு சேனல் தனது பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமப்பட்டால், அது தொழில் ரீதியாக தவறான வழிக்கு செல்லும் நிலைக்கு விஜய் தொலைக்காட்சி தள்ளப்பட்டிருக்கிறதாம். இதனால், கலர்ஸ் நிறுவனத்திற்கு விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











