Don't Miss!
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமிர் புடின்-க்கு நன்றி சொல்லியே ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அய்யோ இன்னைக்கின்னு பார்த்து நான் அங்கு இல்லையே என ஃபீல் பண்ணுவார் மோகன் வைத்யா
சென்னை: அய்யோ நான் இன்று பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் போய்விட்டேனே என்று மோகன் வைத்யா ரொம்ப ஃபீல் பண்ணுவார் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் ரேஷ்மாவுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி விஜய் தொலைக்காட்சி சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரின் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளனர்.
அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்று பார்ப்போமா?
|
பிறந்தநாள்
பிக் பாஸ் வீட்டின் ஆல் இந்தியா ரேடியோவுக்கு இன்று பிறந்தநாளாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரேஷ்மா. ரேஷ்மா போலியாக நடிக்கவில்லை. இருப்பினும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் புறம் பேசுகிறார், ஜால்ரா அடிக்கிறார், எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இந்த வார கேப்டன் வேறு. என்ன சேட்டை எல்லாம் செய்யப் போகிறாரோ என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.
|
மோகன் வைத்யா
நல்ல வேளை மோகன் வைத்யா இன்று பிக் பாஸ் வீட்டில் இல்லை. இருந்திருந்தால் ரேஷ்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் அவரை கட்டிப்பிடித்து முத்தமாக கொடுத்திருப்பார். ரேஷ்மா பிறந்தநாளை மிஸ் பண்ணிட்டோமேன்னு மோகன் வைத்யா ஃபீல் பண்ணிக் கொண்டிருப்பார். அவர் வெளியேறியதால் ரேஷ்மா தப்பித்துக் கொண்டார் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
போட்டியாளர்
கடந்த வாரம் சாக்ஷி அகர்வாலுக்கு பிறந்தநாள் கொண்டாடினார்கள். பிறந்தநாள் அன்று குறும்படம் போட்டு அவரை கதறவிட்டது நன்றாக இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் ரேஷ்மாவுக்கு பிறந்தநாள். அது எப்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்காக பிறந்தநாள் வருகிறது. 100 நாட்களில் யார், யாருக்கு எல்லாம் பிறந்தநாள் வரும் என்று பார்த்து, பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்திருப்பார்களோ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
மோகன் வைத்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் பார்வையாளர்கள் யாரும் அவரை மிஸ் பண்ணவில்லை. இந்த வாரம் சித்தப்பு சரவணன் மற்றும் பாம்பு சாக்ஷியை வெளியேற்றுமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாக்ஷியை வைத்து தானே முக்கோண காதல் கதையை ஓட்டுகிறார்கள். அது எப்படி பாஸ் அவரை வெளியேற்றுவார்கள் என்று சில பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.