»   »  ஜூலியை அடுத்து பரணியை அழவிட்டு டிஆர்பியை ஏத்துறாங்க பாஸ்

ஜூலியை அடுத்து பரணியை அழவிட்டு டிஆர்பியை ஏத்துறாங்க பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை அடுத்து பரணியை அழவைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏத்துகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஜூலியானாவையே குறி வைத்தார்கள். அவரை எலிமினேட் செய்தால் ஒருத்தரும் நிகழ்ச்சியை பார்க்க மாட்டார்கள் என்று அனுயாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

இந்நிலையில் தற்போது பரணியை குறி வைக்கிறார்கள்.

பரணி

பரணி

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவரை தேர்வு செய்கிறார்களாம். தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் பரணியை திட்டியுள்ளார்.

அழுகை

அழுகை

ஆளாளுக்கு தன்னை திட்டுவதை பார்த்த பரணி பாத்ரூமில் போய் தனியாக அழுகிறார். (சொல்லிக் கொடுத்தது போன்று சரியாக)கேமராவுக்கு முன்பு நின்று அழுகிறார். இந்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

காயத்ரி

காயத்ரி

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் காயத்ரியை திட்டுகிறார்கள். சிலர் கஞ்சா கருப்பை வசை பாடுகிறார்கள். பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை துப்புகிறார்கள்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

கேப்டன் விஜயகாந்த் ஒரு முறை துப்பிய வீடியோவை வைத்து மீம்ஸ் போட்டு பிக் பாஸை துப்பு துப்புன்னு துப்பிக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

English summary
After Juliana, bharani is shedding tears in the Big boss house. Netizens strongly believe that this programme is a scripted one.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil