இட்லி தட்டை பெட்டக்ஸில் துடைத்துவிட்டு பொய் சொல்லிய பாலாஜி: பிக் பாஸ் கலாட்டா
Recommended Video

சென்னை: பாலாஜி இட்லி தட்டை துடைத்த இடம் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சமையல் அணியில் பாலாஜி, டேனி உள்ளிட்டோர் உள்ளனர். நேற்று காலை எழுந்து டான்ஸ் ஆடி முடித்துவிட்டு சமையல் அணி இட்லி சுட சென்றுவிட்டது.
பாலாஜி இட்லி தட்டு ஈரமாக இருந்ததால் அதை ஒரு இடத்தில் துடைத்தார்.

இட்லி தட்டு
பாலாஜி இட்லி தட்டை தனது வேட்டியின் பின்புறத்தில் டிக்கி பகுதியில் துடைத்தார். அதை பார்த்த சென்றாயன் வந்து இது என்ன இங்கே துடைக்கிறீர்கள் என்று கேட்டார். உனக்கு இட்லி ஊத்திய தட்டை முன்புறத்தில் துடைத்தேன் தெரியுமா என்று கூறி சென்றாயனை அதிர வைத்தார் பாலாஜி.

மும்தாஜ்
பாலாஜி தனது பின்புறத்தில் இட்லி தட்டை துடைத்த விஷயத்தை சென்றாயன் ஹவுஸ் கேப்டனான வைஷ்ணவியிடம் கூறிவிட்டார். அதை வைஷ்ணவி மும்தாஜ் மற்றும் டேனியிடம் தெரிவித்தார்.

டேனி
வைஷ்ணவி பாலாஜி பற்றி கூறியதை கேட்டு மும்தாஜ் முகம் சுளித்தார். டேனியோ விடுங்க, நான் பேசிக்கிறேன், இனி இது நடக்காது. நான் வாக்குறுதி அளிக்கிறேன் என்றார்.

குறும்படம்
நீங்கள் இட்லி தட்டை பெட்டக்ஸில் வைத்து துடைத்தை சென்றாயனும், வைஷ்ணவியும் பார்த்தார்களாம் என்று டேனி பாலாஜியிடம் கூற அவரோ இல்லை இல்லை நான் என் கையை தான் துடைத்தேன் என்று பொய் சொன்னார். டிஷு பேப்பரால் தான் துடைத்தேன் என்று மீண்டும் பொய் சொன்னார் பாலாஜி. குறும்படம் போட வேண்டிய நேரம் வந்தாச்சு கமல் சார்.

சென்றாயன்
சென்றாயன் போட்டுக் கொடுத்தது தெரிந்து பாலாஜி அவர் மீது கோபமாக உள்ளார். இதை பார்த்த சென்றாயன் கேமரா முன்பு வந்து நின்று பிக் பாஸிடம் சாரி கேட்கிறார். நீ எந்த தப்பும் செய்யவில்லை சென்றாயா, கவலைப்படாதீங்க.


Click it and Unblock the Notifications











