பணக்கார வீட்டுல வேலைக்காரியா இருந்தா இவ்ளோ கஷ்டமா?

சென்னை: நாயகி சீரியலில் அனன்யா வீட்டில் வேலை செய்யும் பெண்ணை, அவ அடிக்கறா பாருங்க...உண்மையில் ரொம்ப கஷ்டமா இருக்கு.

வீட்டிக்கு வேலை செய்யறவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பா இருப்பது...ஏங்கவைத்து பார்த்தா பேசிக்கறது இயல்பா நடக்கற ஒரு விஷயம்.

இதில் சந்தேகப்பட ஒண்ணுமே இல்லை... ஆனா, நாயகியில் இந்த லாஜிக்கே தப்பா இருக்கு.

வேலைக்காரி இங்கே

வேலைக்காரி இங்கே

அனன்யா வீட்டு வேலைக்காரி ஆனந்தி, கண்மணி இவங்ககூட பேசிகிட்டு இருந்ததை அனன்யா பார்த்துடறா. இந்த கும்பல்கிட்ட இவளுக்கு என்ன பேச்சுன்னு நினைச்ச அனன்யா, உடனே வேலைக்காரிக்கு போன் பண்றா. நீ இப்போ எங்கே இருக்கேன்னு கேட்கறா...

குழந்தை ஸ்கூலில்

குழந்தை ஸ்கூலில்

நான் என் பையன் ஸ்கூலில்தான் இருக்கேன் அம்மான்னு வேலைக்காரி சொல்ல ,உடனே 20 நிமிஷத்துக்குள்ளே வீட்டுக்கு வான்னு சொல்லி கட்டளை போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பறா.

ஸ்கூலுக்குது நிஜமா

ஸ்கூலுக்குது நிஜமா

நிஜமா ஸ்கூலுக்குத்தான் போயிருந்தியா... அப்படியே ஸ்கூலுக்கு போயிருந்தாலும் அங்கிருந்து வர முப்பது நிமிஷத்துக்கு மேல ஆகும்.நீ 15 நிமிஷத்துல வந்து நிக்கறேன்னு அனன்யா மிரட்டறா. வேலைக்காரி பயப்படறா... சொல்லுடி அவங்கக்கூட உனக்கு என்ன பேச்சுன்னு கேட்கறா...

பொய் சொல்ல தெரியலை

பொய் சொல்ல தெரியலை

ஏழைகளுக்கு பொய் சொல்லாத தெரியலை பாருங்க... அவங்களும் வீட்டு வேலை செய்யறாங்க... நானும் வீட்டு வேலை செய்யறேன்மா... இதைப்பத்திதானே பேசிகிட்டு இருந்தோம்... உங்களுக்கு அவங்க கூட பேசினா பிடிக்காதுன்னு பொய் சொன்னேன்னு சொல்ல தெரியலை பாவம்.

ஆனந்தி சொன்னாங்க

ஆனந்தி சொன்னாங்க

உங்க வீட்டுல நீங்க என்ன பேசிக்கறீங்கன்னு மொபைலில் அனந்தி வீடியோ எடுக்க சொன்னாங்க. அந்த போனைத்தான்மா குடுக்க போனேன்னு உண்மையை சொல்லி அனன்யா கையால பயங்கரமா அடி வாங்கிக்கறா. அறையில தள்ளி பூட்டியும் வச்சுடறா...

பணக்காரங்க வீட்டில் வீட்டு வேலை செய்வது இவ்வளவு கொடூரமானதா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X