ஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு
சென்னை: டேனிக்கும், வைஷ்ணவிக்கும் இடையே மோதல் ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து பொன்னம்பலம் வெளியேறிய கையோடு டேனிக்கும், வைஷ்ணவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டேனி மீது கொலவெறியில் இருக்கும் வைஷ்ணவி கெட்ட வார்த்தை பேசியுள்ளார்.
தாடி பாலாஜி தத்துவம் எல்லாம் பேசுகிறார். மகத் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.
வைஷ்ணவி
பிக் பாஸ் வீட்டில் தமிழை வைத்து பாலிடிக்ஸ் பண்ணாதீங்க டேனி. தமிழ், தமிழ் என்று நீங்கள் சீன் போடுவதை பார்த்து பார்வையாளர்கள் உங்களை ஆதரிப்பதற்கு பதில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
கெட்ட வார்த்தை
டேனிக்கும், வைஷ்ணவிக்கும் இடையே சண்டையை தூண்டிவிட்டுள்ளார்கள். வைஷ்ணவி கோபத்தில் கெட்ட வார்த்தை எல்லாம் பேசுகிறார். டேனி வழக்கம் போல தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.
பாலாஜி
இப்ப என்ன சொல்ல வர்றீங்க பாலாஜி?
புரிகிறதா?
மக்களே உங்களுக்கு எதாவது புரியுது?! ஏன்னா எங்களுக்கு புரியல! என்ற தலைப்புடன் வெளியான ப்ரொமோவை பார்த்த மக்கள் புரியாவிட்டால் ஏன் ஒளிபரப்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











