ஆபிஸ்ல இடைஞ்சல் பண்ணா சொல்லுங்க…! சும்மா பிரிச்சிருவோம்…!!
விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நட்பு, காதலோடு, மேலதிகாரிகளின் உள்குத்து... போட்டுவாங்குதல், பழிவாங்கும் நடவடிக்கை, ஆகியவற்றின் நடுவே கார்த்தி, ராஜி, விஷ்ணு, லட்சுமி ஆகியோரின் நிலையை படம்பிடிக்கிறது ஆபிஸ்.
ஆபிஸ் ஹெட் விஸ்வநாதனின் ராஜினாமாவிற்குப் பிறகு அவரது இடத்திற்கு வருகிறாள் சூசன். அலுவலக சி.ஒ.ஒ உடன் இணைந்து விஸ்வநாதனின் நலம் விரும்பிகளை பழிவாங்குகிறாள்.
பரபரப்பாக வேலை செய்யும் கார்த்திக் எந்த வேலையும் இன்றி அமரவைக்கப்படுகிறான். ராஜியின் தலையில் சுமையை ஏற்றுகின்றனர். செய்யும் வேலையை அவமானப்படுத்துகின்றனர்.
லட்சுமியை மட்டும் புரமோசன் செய்து, வேறுவிதமான டார்ச்சரைக் கொடுக்கின்றனர்.

மாமனாருடன் மோதலா?
பரபரப்பான இந்த சூழலில் நால்வர் டீமின் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. ராஜியின் அப்பா வீட்டுக்கு வந்தபோது கார்த்திக் முகம் கொடுத்து பேச மறுக்கிறான்.

ராஜியின் கோபம்
கணவனின் இந்த செயல் ராஜிக்கு கோபத்தை ஏற்படுத்தவே அலுவலகத்தில் கார்த்திக் உடன் சண்டை போடுகிறாள்.

மன்னிப்பு கேட்ட கார்த்திக்
அங்கிருந்து கோபத்தோடு வெளியேறும் கார்த்திக் வீட்டிற்கு வந்து மாமனாரிடம் மன்னிப்பு கேட்கிறான். அதை பெரியமனதோடு பாராட்டுகிறார்.

வேலையில் சிக்கல்
தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் அலுவலக டார்ச்சர்தான் என்று மாமனாரிடம் விளக்குகிறான் கார்த்திக். மனஉளைச்சல் அதிகமாகிறது என்றும் வருத்தப்படுகிறான்.

கவலைய விடுங்க பிரிச்சிருவோம்
அதைக் கேட்ட மாமனாரோ, அட விடுங்க மாப்ள இதுக்குப் போயி கவலைப்படலாமா? குடைச்சல் கொடுக்கிறவன் கண்ல விரலை விட்டு ஆட்டுங்க... இல்லைன்னா, ஊர்ல இருந்து லாரியில ஆள கொண்டுவந்து ஆபிசை தனித்தனியா பிரிச்சிருவோம் என்று கூறுகிறார்.

ராஜியின் ஆச்சரியம்
வீட்டிற்கு வரும் ராஜி, தன் அப்பா உடன் கார்த்திக் சமாதனம் ஆகிவிட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறாள். தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

அடுத்தது என்ன?
லட்சுமியை வெளியேற்ற செய்யப்படும் சூழ்ச்சியை அவள் முறியடிக்கிறாளா? விஷ்ணுவும், லட்சுமியும் மீண்டும் இணைவார்களா? நால்வர் டீம், அலுவலக சங்கடங்களை சாதனையாக மாற்றுவார்களா? என்ற பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது ஆபிஸ்.


Click it and Unblock the Notifications











