கொண்டாடும் மோகன் வைத்யா.. பிக்பாஸ் வீட்டில் பெண் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு எப்போதும் ஒரே இச்சுதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யா பெண் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இச்சு கொடுப்பதில் ரொம்பவும் ஆர்வமாய் உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் மோகன் வைத்யா பங்கேற்றுள்ளார். வீட்டிற்குள் வந்த முதல் மூன்று நாட்கள் அடக்கி வாசித்தார்.
தனது சொந்தக் கதை சோகக்கதையெல்லாம் கூறி ஹவுஸ்மேட்ஸ்களின் மனதில் பரிதாப இடத்தை பிடித்து விட்டார். இதனால் அவரை டாடி டாடி என அழைக்கின்றனர் ஹவுஸ் மேட்ஸ்கள்.

உண்மை முகம்
மக்களிடமும் ஓரளவுக்கு சென்டிமென்ட் மரியாதையை பெற்றிருந்தார் மோகன் வைத்யா. ஆனால் நாளுக்கு நாள் வெளி வரும் அவரது உண்மை முகத்தால் மக்கள் நொந்தே விட்டனர்.

ரகசிய பேச்சு
நேற்று சாக்ஷியுடன் டிரெஸிங் ரூமில் மற்ற ஹவுஸ்மேட்கள் குறித்து ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் மோகன் வைத்யா. அப்போது லாஸ்லியா அங்குவந்தார். இதனை சாக்ஷி, மோகன் வைத்யாவிடம் கூற லாஸ்லியா நைஸ் கெர்ள் என்று கூறிக்கொண்டே வெளியே வந்தார்.

அண்டபுளுகு
பின்னர் லாஸ்லியாவை பார்த்துவிட்டு ஓ.. நீ இங்கேதான் இருக்கிறாயா? நான் பார்க்கவேயில்லை என அண்ட புளு புளுகினார் மோகன் வைத்யா. இதன்மூலம் அவரது உண்மையான முகம் மீண்டும் மக்களுக்கு தெரியவந்தது.

கட்டிப்பிடித்து முத்தம்
அடுத்தப்படியாக அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு முத்தம் கொடுப்பதை மிகவும் விரும்புகிறார். ஏதாவது ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை கூறி அழுவதும், அதற்கு ஆறுதல் சொல்லும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுமாய் கொண்டாடுகிறார் மனுஷன்.

கேட்டு கேட்டு வாங்கி
அதோடு மட்டுமல்ல தான் முத்தம் கொடுக்கும் பெண்களிடம் தனக்கும் முத்தம் கொடுங்கள் என கேட்டு கேட்டு வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கிறார். அவரின் இந்த நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள், இதற்கு சினேகன் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறத் தொடங்கிவிட்டனர்.

கொடுப்பதும் வாங்குவதும்
மீரா டிரெஸின் ஹுக்கை போட சொல்லி கேட்டதை, தான் ஒழுங்கு போல அப்போது கேப்டனாக இருந்த வனிதாவிடம் போய் சொல்லி தேவையில்லாத சண்டையை உருவாக்கினார். ஆனால் இப்போது பெண்களுக்கு முத்தம் கொடுப்பதும் வாங்குவதுமாக கலக்கி வருகிறார் மோகன் வைத்யா.

ஜூலியை மிஞ்சிவிட்டார்
மோகன் வைத்யாவின் இந்த பிஹேவிங் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரை காரித்துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர். வயதிற்கும் தனது அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் நடந்து கொள்ளும் மோகன் வைத்யா புரணி பேசுவதில் ஜூலியை மிஞ்சிவிட்டார்.


Click it and Unblock the Notifications











