சரவணன் வெளியேற்றம்: ஆமாங்க.. எதிர்பாராத டிவிஸ்ட்.. சொல்றது யாருன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது எதிர்பாராத டிவிஸ்ட் என முன்னாள் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டப் பிறகும் கூட திருப்திபடாத பிக்பாஸ் குழு, அவரை நேற்று அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர்.
இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபடியே வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சோஷியல் மீடியாக்களில்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அந்த நிகழ்ச்சிதான் டாப்பில் உள்ளது. அந்த நிகழ்ச்சி குறித்துதான் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரபலம்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றவரும் தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல், சரவணன் வெளியேற்றம் குறித்து டிவிட்டியுள்ளார்.
எதிர்பாராத டிவிஸ்ட்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆமாம்.. எதிர்பாராத டிவிஸ்ட். கடந்த வாரம் முழுவதும் செலிபிரிட்டிகளும் பொதுமக்களும் இவருக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என கூறியிருந்தனர். அதற்காக கூட இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் காஜல்.

அந்த விஷயத்திற்காக கூட
சேரனை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் சரவணனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. சேரனை அடிப்பது போல் சரவணன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்றார். இந்த விஷயம் பூதாகரமானது. அதனால் சேரன் விஷயத்தை மனதில் வைத்து கூட அவரை வெளியேற்றியிருக்கலாம் என்கிறார் காஜல்.

இவன் கோர்த்து விடுறான்
இதேபோல் மற்றொரு வீடியோவையும் காஜல் ஷேர் செய்துள்ளார். அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவன் கோர்த்துவிடுறான் என கமலை ஒருமையில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோர்த்து உடுறாங்க என்றுதான் அந்த வீடியோவில் கூறுவதாக உள்ளது.


Click it and Unblock the Notifications











