ஜாக்பாட் நிகழ்ச்சியின் 500 வது எபிசோட்!

By Mayura Akilan

Jackpot 500 Special Episode
எந்த ஒரு நிகழ்ச்சியுமே வெற்றிகரமானதாக மாற அதன் தொகுப்பாளர், பங்கேற்பாளர்கள் இருவருக்குமே சமமான பங்குண்டு. அதுபோன்ற ஒரு மக்களை கவர்ந்த நிகழ்ச்சியான ஜாக்பாட் ஜூன் 3 ம் தேதியோடு 500 வது எபிசோடினை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஸ்பெசல் என்பதால் துபாயில் படப்பதிவு நடைபெற்றது.

துபாய் நேயர்களின் மத்தியில் சிம்ரனின் கொஞ்சும் தமிழ் கேள்விகளும் பங்கேற்பாளர்களின் பதிலும் ஆரவாரமாய் அமைந்திருந்தது. 500 வது எபிசோடு என்பதால் சிம்ரன் அதிக சிரத்தை எடுத்து உடை அலங்காரம், நகை அலங்காரம் செய்திருந்தார்.

ஜாக்பாட் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தொகுப்பாளராக வந்த குஷ்பூவும் தன் ஜாக்கெட்டினால் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல மார்க்கெட்டினை தக்க வைத்தார். அதன்பின் நதியா சில வாரங்கள் இதனை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை சிம்ரனின் கொஞ்சு தமிழும், போட்டியாளர்களிடம் அவர் கேட்கும் இயல்பான கேள்விகளும் நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

ஜாக்பாட் நிகழ்ச்சியின் சிறப்பு ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு என்பதில்லை. பார்வையாளர்களுக்கும், நேயர்களுக்கும் கூட பரிசுகள் உண்டு.இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விகளும், வீடு மற்றும் வெளி உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

நிகழ்ச்சியை தயாரிக்கும் 'டெலிசூம்' நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அணிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அணியினர், இயக்குநர் மற்றும் தேர்வுக்குழுவினாரால் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஹேமா சுனில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X