ஆஹா... இலங்கைக்கு செல்ல ராமர் பாலம்... பரவசம்!

சென்னை: சன் டிவியின் ஜெய் அனுமான் சீரியலில் சீதா தேவியை லங்கைக்கு ராவணன் புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்று விடுகிறான்.

தேவியை ராவணன் கடத்தி சென்றது உண்மைதான் என்றும், அங்குள்ள அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் என்றும் அனுமன் கண்டுவந்து பிரபு ஸ்ரீராமரிடம் உரைக்கிறான்.

அடுத்து ,சீதா தேவியை ஒரு மகா புருஷனாக ஸ்ரீராமர் படையுடன் சென்று மீட்டு வர வேண்டும்.அதற்கு லங்கைக்கு செல்ல கடலை கடந்தாக வேண்டும்.

வன ராணி

வன ராணி

ஸ்ரீராமர் பாலம் கட்ட மரங்கள், கற்களைக் கொண்டு வாருங்கள் என்று வானர சேனைக்கு கட்டளையிடுகிறார்.மலைக்கு மரங்களுக்கும், கற்களுக்குமாக வீரர்கள் செல்ல, அங்கு வன தேவி காட்சி தருகிறார்.

மழைக்கு ஆதாரம்

மழைக்கு ஆதாரம்

அனுமன் நீங்கள் கற்களையும் மரங்களையும் கொண்டு செல்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ,பிராண வாயு, மழைக்கு ஆதாரமாக இருக்கும் இந்த மரங்களையும் கற்களையும் எடுத்துவிட்டால் இயற்கைக்கு சூழல் மாற்றம் நிகழ்ந்துவிடுமே என்றுதான் எனக்கு அச்சமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

கவலை வேண்டாம் தேவி

கவலை வேண்டாம் தேவி

கவலை வேண்டாம் தேவி...ஒரு மரம் வெட்டினால் பதிலுக்கு இரண்டு கன்றுகளை நட்டு வைத்து வனத்தை காப்பாற்றுவோம் தேவி என்று அனுமன் கூறுகிறார். அப்படியானால் எடுத்துக் கொள்ளுங்கள்... நான் வன விலங்குகளையும் ,பறவைகளையும் பாதுகாப்பான இடத்தில் வசிக்க சொல்கிறேன் என்று கூறி வன தேவி சென்று விடுகிறார்.

கற்கள் மிதக்கிறது

கற்கள் மிதக்கிறது

நளன் கையால் கற்களை கடலில் போட்டால் கற்கள் ஒன்று சேர்ந்து பாலம் அமைந்துவிடும் என்று போட சொல்ல, கற்கள் அதாவது பாறைகள் கடலில் ஒன்று சேராமல் மிதக்கின்றன. நளன் அனுமனிடம் இதைக்கூற, அனுமன் முதல் பாறையில் ரா என்று எழுதி இரண்டாவது பாறையில் மா என்று எழுதி கடலில் போட பாறைகள் ஒன்று சேருகின்றன. பாலமும் அமைந்து வருகிறது.

அணில்கள் இரண்டு

அணில்கள் இரண்டு

இரண்டு அணில்கள் பாறையைத் தூக்க முயற்சித்து கொண்டு இருக்க... நீங்களும் பாலம் கட்ட உதவி செய்ய வேண்டுமா என்று அனுமன் கேட்கிறார். ஆம் என்று சொன்ன அணில்களிடம், உங்களால் பாறையைத் தூக்க முடியாது. வேண்டுமானால் மண் கொண்டு சென்று பாறை இடைவெளியை நிரப்புங்கள் என்று அனுமன் ஆலோசனை கூற அணில்களும் அவ்வாறே செய்கின்றன.

இந்த காட்சிகள் கணக்கு கிடைக்காத அரிய காட்சிகள் போல பரவசத்தை உருவாக்குகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X