Manikandan: கலக்கப்போவது யாரு சீசன் 4ல் ரன்னர் அப் ஆனவரா ஜெய்பீம் மணிகண்டன்.. டிரெண்டாகும் பிக்!
சென்னை: கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்பீம் மணிகண்டன் மிமிக்ரி செய்து பேசி அசத்திய ப்ரமோ வெளியான நிலையில், மணிகண்டனுக்கு இப்படியொரு திறமையா என பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், இதே விஜய் டிவியில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மிமிக்ரி திறமையால் அனைவரையும் அசர வைத்த மணிகண்டனின் த்ரோபேக் புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.
இந்த வாரம் வெளியான படங்களிலேயே மணிகண்டன் நடிப்பில் வெளியாகி உள்ள குட்நைட் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் ராஜாக்கண்ணு: 2015ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, பாவக் கதைகள், ஏலே உள்ளிட்ட பல படங்களில் நடித்த மணிகண்டன் சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்து அனைவரையும் தனது நடிப்பால் கலங்கடித்து விட்டார்.
இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் உண்மையான நாயகனே மணிகண்டன் தான் என சூர்யாவே பல விருது மேடைகளில் பாராட்டி உள்ளார்.
மிமிக்ரியில் மன்னன்: கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணிகண்டனின் கலக்கலான மிமிக்ரி ப்ரமோ வெளியாகி சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் சமீபத்திய மற்றும் இளமைக் காலத்து குரலில் அசால்ட்டாக பேசிய மணிகண்டன், ரகுவரன் பாட்ஷா, முதல்வன், யாரடி நீ மோகினி படங்களில் பேசியது போலவே அப்படியே பேசிக் காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். மேலும், விஜய்சேதுபதி சகஜமாக நண்பர்களிடம் எப்படி பேசுவார் என்பதையும் பேசிக் காட்டி அப்ளாஸ் அள்ளி உள்ளார்.
கலக்கப் போவது யாரு சீசன் 4 ரன்னர் அப்: கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4க்கு சீஃப் கெஸ்ட்டாக வந்துள்ள இதே மணிகண்டன் தான் 2008ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இளம் வயது போட்டோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
குட்நைட்டில் செம நடிப்பு: இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மிதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள குட் நைட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறட்டை சத்தத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இதே விஷயத்தை வைத்து மேலும், சில படங்கள் தமிழ் சினிமாவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











