இனிவரும் நாட்களில் அன்பான பயணம்.. ஆட்டோராணி நம்பிக்கை.. புதிய தொடர்களை ஒளிபரப்பும் பிரபல சேனல்!

சென்னை : கலர்ஸ் தமிழ் சேனல் தன்னுடைய ரசிகர்களை கவரும்வகையில் புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது.

பெண் உரிமையை மையமாக கொண்டு ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா போன்ற தொடர்களை ஒளிபரப்ப உள்ளது.

வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் உள்ளத்தை அளித்தா, ஜமீலா தொடர்கள் இந்த சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

வரவேற்பை பெறும் சிரியல்கள்

வரவேற்பை பெறும் சிரியல்கள்

தமிழில் பிரபலமான சேனல்கள் அடுத்தடுத்த சிறப்பான சீரியல்களை களமிறக்கி வருகின்றன. நிகழ்ச்சிகளுக்கு மெனக்கெடுவது போல தனியாக ரூம் போட்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாத காரணங்களாலும் ரசிகர்களை ஆரம்பத்தில் கவர்ந்துவிட்டால் தொடர்ந்து சீரியல்கள்மூலம் டிஆர்பியை அதிகரிக்க முடியும் என்பதாலும் சேனல்களின் பர்ஸ்ட் சாய்சாக சீரியல்கள் காணப்படுகின்றன.

அடுத்தடுத்த சீரியல்கள்

அடுத்தடுத்த சீரியல்கள்

அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவிக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலும் இந்தப் போட்டியில் உள்ளன. அந்த வகையில் வரும் 10ம் தேதி முதல் அடுத்தடுத்த சிறப்பான தொடர்களை களமிறக்க உள்ளது கலர்ஸ் தமிழ் சேனல். அதன் ப்ரமோக்களும் சிறப்பான வகையில் ரசிகர்களை சென்றடைந்துள்ளன.

அக்டோபர் 10ம் தேதி ஒளிபரப்பு

அக்டோபர் 10ம் தேதி ஒளிபரப்பு

ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா என இரண்டு சீரியல்களை அக்டோபர் 10ம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளது கலர்ஸ் தமிழ் சேனல். இதில் இஸ்லாமிய பெண்ணின் வாழ்வியலை சொல்லும் ஜமீலா தொடரில் தன்வி ராவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நடிகர் கௌதம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஜமீலாவின் பெற்றோராக நடித்துள்ளனர்.

ஆட்டோராணியாக நடிகை வைஷ்ணவி

ஆட்டோராணியாக நடிகை வைஷ்ணவி

இதேபோல ஆட்டோராணியாக உள்ளத்தை அள்ளித்தா என்ற தொடரில் வைஷ்ணவி நடித்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டே ஆட்டோவும் ஓட்டும் நாயகி, இதன்மூலம் தன்னுடைய குடும்பத்தை உயர்த்த துடிக்கிறாள். இதன் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வைஷ்ணவி மகிழ்ச்சி

வைஷ்ணவி மகிழ்ச்சி

இந்தத் தொடரில் நடித்துள்ள நடிகை வைஷ்ணவி கூறுகையில், முன்னதாக மிதுன ராசி என்ற தொடருக்காக இதே கேரக்டரில் கலர்ஸ் கன்னடத்தில் நடித்துள்ளதால், ஆட்டோ ராணியாக தற்போது நடித்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பெண்களாலும் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று எண்ணும்வகையில் இந்தத் தொடர் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

தினந்தோறும் இரவு 7 மற்றும் 9 ஆகிய ப்ரைம் டைமில் இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. ரசிகர்களை கவரும் வகையில் பெண்களை முக்கியமான கேரக்டர்களில் வைத்து இந்தத் தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. இதனிடையே இந்தத் தொடர்களை திரையரங்குகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சிறப்பாக விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் மனப்பான்மை

பாசிட்டிவ் மனப்பான்மை

சீரியல்கள் என்றாலே பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டு தான் எடுக்கப்படும். அவர்கள் வாழ்க்கையில் படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்தத் தொடர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. ஆனால் பாசிட்டிவ் மனப்பான்மையுடன் ஜமீலா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X