ஜேம்ஸ் வசந்தன் வழங்கும் ஒரு வார்த்தை ஒரு லட்சம் சீசன் -2
விஜய் டிவியில் பள்ளி மாணவர்களின் வார்த்தை வேட்டைக்கு மகுடம் சூட்டி அங்கீகாரம் அளித்தது 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்'.
கடந்த சீசனின் வெற்றியைத் தொடர்ந்து 'ஒரு வார்த்தை ஒரு லட்சம் - ஜுனியர் சீசன் 2' என்ற பெயரில் நிகழ்ச்சி மீண்டும் ஏப்ரல் 27ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஜேம்ஸ் வசந்தன்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த வார்த்தை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை வழக்கம் போல் சுவாரசியமாக தொகுத்து வழங்குகிறார்.
36 பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் தங்களது திறமையை நிரூபிக்கத் தயாராக உள்ளனர். 8 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு அணிக்கு இரண்டு பேராக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதற்காக, சிறந்த பள்ளிகளிலிருந்து சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
12 அணிகள் தேர்வு
மொத்தம் ஐந்து கட்டப் போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று இறுதிக்கட்டப் போட்டி நடக்கும். முதல் கட்டப் போட்டியிலிருந்து 12 அணிகள் மட்டுமே அடுத்தக் கட்டப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இறுதியில் வெல்லப்போகும் அணி
இரண்டாம் கட்டப் போட்டியிலிருந்து 6 அணிகள் மட்டும் காலிறுதிக்கு தகுதி பெறும். இதிலிருந்து 3 அணிகள் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு 2 அணிகள் மட்டுமே தகுதி பெறும்.
ஒரு லட்சம் பரிசு
வெற்றி பெறும் அணிக்கு 'ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஜுனியர்' பட்டமும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 27ம் தேதி முதல் ஞாயிறு தோறும் மாலை 5 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











