அசிங்கமான வேலை நடக்குது.. சவுந்தர்யா, ராணவ் பிஆர் ரகசியங்களை அம்பலப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிற்காக கடுமையான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சீசன் டைட்டிலை முத்துக்குமரன் தான் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அவரது இமேஜை மக்கள் மத்தியில் டேமேஜ் செய்யும் வேலைகளை சவுந்தர்யா மற்றும் ராணவ்வின் பிஆர் டீம் பரபரப்பாக செய்து வருவதாக இசையமைப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
அப்பாவுக்கு செருப்பு வாங்கவே காசு இல்லை என முத்துக்குமரன் சொன்ன நிலையில், அதெல்லாம் சுத்தப் பொய் வெளிநாட்டில் தங்க நகைகளுடன் முத்துக்குமரன் அடித்த ஜாலி டூரை பாருங்க, இந்த காசை எல்லாம் வைத்துக் கொண்டு அப்பாவுக்கு செருப்பு வாங்கித் தந்திருக்கலாமே என நெட்டிசன்கள் திடீரென முத்துக்குமரனின் பழைய குப்பைகளை கிளர ஆரம்பித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க பிஆர் டீமின் வேலை தான் என்று முத்துக்குமரன் ஆர்மி சொல்லி வரும் நிலையில், அவர்களுக்கு சப்போர்ட்டாக ஜேம்ஸ் வசந்தனும் பேசியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பிஆர் பிசினஸ் ஆன பிக் பாஸ் ஷோ: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு நன்றாக விளையாடி மக்களை ஈர்த்து வெற்றிப் பெறுவது எல்லாம் கிடையவே கிடையாது என்றும் பிஆர் டீமை வைத்துக் கொண்டு தினமும் ஒரு போட்டியாளரை மையப்படுத்தி அவர்கள் செய்யும் விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவருக்கு ஓட்டுக்களை அதிகரிக்கச் செய்வது தான் பிஆர்களின் வேலையாக இருக்க வேண்டும். ஆனால், வன்மம் நிறைந்த இந்த உலகில் அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு மேலே வரவைப்பது தான் பிஆர் டீமின் வேலையாக உள்ளது என்றும் அதைத்தான் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனாக செய்து வருவதாக ஜேம்ஸ் வசந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்.
சவுந்தர்யா, ராணவ் பிஆர் டீம் வேலை: சவுந்தர்யா சிரிக்கிறது அழகு, அவர் உட்கார்ந்திருப்பது சூப்பராக இருக்கிறது என ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பிம்பத்தை உருவாக்கி வந்த அவரது பிஆர் டீம் தற்போது முத்துக்குமரனுக்கு எதிரான வேலையை அதிக ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். அதே போல ராணவ்வின் பிஆர் டீம் அவர் ரொம்ப அப்பாவி என புரொஜெக்ட் செய்து வருகின்றனர். இரண்டு டீம்களும் முத்துக்குமரனை டவுன் செய்ய வேண்டிய அனைத்து கீழ்த்தரமான வேலைகளிலும் இறங்கி விட்டதாக ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீங்க யாரு பிஆர்: சைக்கலாஜிக்கலாக முத்து நல்லவன் என சொல்லிக் கொண்டிருந்த மக்களை ஆமாம்ப்பா அவன் ஓவரா பண்றான், இதெல்லாம் பொய் தானே என சொல்ல வைக்கும் வேலையை தற்போது பிஆர் டீம் சிறப்பாக செய்து வருவதாக ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். ஜேம்ஸ் வசந்தனின் பேச்சை முத்துக்குமரன் ஆர்மியினர் ஷேர் செய்து வரும் நிலையில், நீங்கள் முத்துக்குமரன் பிஆரா என பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் சவுந்தர்யா மற்றும் ராணவ்வின் பிஆர் டீம் அவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 இன்னும் 2 வாரத்தில் முடிய காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











