மலேசியாவை திணறவைத்த.. ஜன நாயகன் இசைவெளியீட்டு விழா.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எப்போ பார்க்கலாம்?

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா 27ந் தேதி மலேசியாவே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மலேசியாவில் அதிகம் பேர் பங்கேற்ற விழாவாக 'Malaysian Book of Records'ல் இடம்பிடித்து புது சாதனை படைத்தது. இந்த விழாவை நேரடியாக எந்த தளத்திலும் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியா மணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது. மலேசியாவில் இதுவரை இப்படி ஒரு விழா நடந்ததே இல்லை என்று சொல்லும் அளவிக்கும் 80 ஆயிரம் பேர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். மலேசியாவில் அதுவும் ஒரு தமிழ் பட விழாவின் இசை வெளியீட்டு விழாவில் இத்தனை ஆயிரம் பேர் வந்தது இதுவே முதல் முறையாகும்.

Jana Nayagan Vijay Zee Tamil tv
Photo Credit:

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: இந்த விழாவில் பேசிய விஜய், என் சினிமா பயணம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இப்போ வரைக்கும் கிட்டத்தட்ட 30, 33 வருடங்களுக்கு மேலாக என்னுடனே நின்று இருக்கிறார்கள். எனக்கு ஒன்னுனா தியேட்டரில் வந்து நிற்கக்கூடிய ரசிகர்களுக்காக, அவர்களுக்காக நாளைக்கு அவர்களுக்கு ஒன்று என்றால் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று நான் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த என்னுடைய ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி சொல்லிவிட்டுப் போகிறவன் கிடையாது நன்றிக் கடனை தீர்த்து விட்டுத்தான் போவேன் என்று பேசி இருந்தார். இந்த பேச்சுக்கள் அனைத்தும் இணையத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால் இணையத்தில் வைரலானது.

எந்த டிவியில் எப்போ: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றிய நிலையில், அனைவரும் எப்போது நிகழ்ச்சி டிவியில் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஜன நாயகன் இசைவெளியீட்டு விழா ஜனவரி 4ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளது. இதனால், தளபதி திருவிழாவை காண ரசிகர்கள் மகிழ்ச்சியோடு காத்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X